உங்கள் குழந்தைகளின் பள்ளிப் பையில் இருந்து மண் கறைகளை எளிதாக சுத்தம் செய்யுங்கள்!

உங்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தை, மண் கறைகளுடன் வீட்டிற்கு வந்திருந்தால் கவலைப்பட வேண்டாம். அவற்றை அகற்ற இந்த எளிய படிப்படியான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

விளம்பரம்Buy Domex
Clean Mud Stains from your Kids’ School bag with Ease!

மண் கறை படிந்த பையை சுத்தம் செய்வதற்கு முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா பள்ளி பைகளும் ஒரே மாதிரியான பொருட்களால் ஆனவை அல்ல. பையை சுத்தம் செய்வதற்கான சரியான வழியை தீர்மானிக்க பராமரிப்பு லேபிளை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

பையை இயந்திர முறையில் கழுவுவதா அல்லது கைகளால் கழுவுவதா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். சலவையின் போது பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் இங்கே.

இயந்திரசலவை

Step 1: பராமரிப்பு லேபிளை சரிபார்க்கவும்:

பெரும்பாலான முதுகுப்பைகளின் பராமரிப்பு லேபிள்கள், இயந்திர சலவையை பரிந்துரைக்கின்றன, குறிப்பாக நைலான் அல்லது கேன்வாஸால் செய்யப்பட்டவை. உங்கள் குழந்தைகளின் பையை இயந்திரத்தின் உள்ளே வைப்பதற்கு முன், உள்ளிருக்கும் எல்லா பைகளையும் சரிபார்த்து அவற்றை முழுவதுமாக காலி செய்துள்ளீர்கள் என்பதை

விளம்பரம்Buy Domex

Step 2: கடினமான கறைகளை முன்கூட்டியே கவனியுங்கள்:

ஏதேனும் கடினமான கறைகள் இருந்தால், கறை படிந்த இடத்தில் திரவ சவர்க்காரத்தைப் தடவி, பழைய பல் துலக்கும் தூரிகை கொண்டு மெதுவாக தேய்க்கவேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து பையை இயந்திரத்திற்குள் போடவேண்டும்.

Step 3: பையை உள்பக்கம் திருப்புங்கள்:

பையை உள்ளே-வெளியே திருப்புங்கள், அல்லது ஒரு சலவை கண்ணிப்பையில் வைக்கவும். இது ஜிப்பர்கள் மற்றும் பட்டைகள் உள்ளே சிக்கி இயந்திரத்தை சேதப்படுத்தாமல் தடுக்கும்.

Step 4: சவர்க்காரம் சேர்க்கவும்

3 மேஜைக்கரண்டி மென்மையான சவர்க்காரத்தை இயந்திரத்தில் சேர்க்கவும்

Step 5: சுழற்சியை இயக்கவும்

குளிர்ந்த நீரில், மென்மையான சுழற்சியால், பையை கழுவவும்.

Step 6: காற்றில் உலர்த்தவும்

கடைசியாக, ஜிப்பர்களை  திறந்து வைத்து,தலைகீழாக தொங்க விட்டு ,காற்றில் உலர்த்தவும்.

கை-சலவை

Step 1: பையை காலி செய்யவும்

பழைய முறைப்படி, கைகளால் துவைக்கும் முன், பையை முழுவதுமாக காலி செய்யுங்கள்.

Step 2: கடினமான கறைகளை முன்கூட்டியே கவனியுங்கள்

உலர்ந்த அல்லது கடினமான கறைகள் இருந்தால், கறை படிந்த இடத்தில் திரவ சவர்க்காரத்தைப் பயன்படுத்துங்கள். பழைய பல் துலக்கும் தூரிகை கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். அதை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்

Step 3: ஊறவைக்கவும்

முழு பையையும் மூழ்கடிக்க போதுமான வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு வாளியில் நிரப்பவும். 2 டேபிள்ஸ்பூன் சோப்புத்தூள் அல்லது சோப்பு திரவம் சேர்க்கவும். இந்த சோப்பு கரைசலில் பையை நன்கு ஊறவைக்கவும்.

Step 4: தேய்த்துக் கழுவவும்

ஒரு தூரிகை மூலம், பையின் உட்புறங்களையும் வெளிப்புறங்களையும் மெதுவாக தேய்த்துக் கழுவவும்.

Step 5: அலசவும்

இறுதியாக, குளிர்ந்த நீரின் கீழ், பையை அலசி, தொங்க விட்டு , நன்கு உலர வைக்கவும்.

அவ்வளவுதான்! இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி, உங்கள் குழந்தைகளின் பள்ளி பையை எளிதில் சுத்தமாக்குங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது