உங்கள் குழந்தையின் பில்டிங் பிளாக்ஸ் செட்டை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழி

உங்கள் குழந்தையின் பில்டிங் பிளாக் செட்டுக்கு வழக்கமான சுத்தம் தேவை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன்? இங்கே பார்ப்போம்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

விளம்பரம்Buy Domex
The Best Way to Clean Your Child's Building Blocks' Set

குழந்தைகள், வண்ணமயமான பில்டிங் பிளாக்ஸ் செட்டுடன் விளையாடுவதை மிகவும் விரும்புகிறார்கள். அவர்கள் விளையாட்டு, வேடிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல், குழந்தைகளிடத்தில் படைப்பாற்றல் மற்றும் மூளை வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இருப்பினும் மற்ற பொம்மைகளைப் போலவே, இந்த செட்களையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். சிறிய குழந்தைகள் இந்த செட்டுகளை வாயில் வைக்கக்கூடும் மற்றும் சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அது தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும். எனவே உங்கள் குழந்தையின் பில்டிங் பிளாக் செட்டுகளை எளிதான முறையில் சுத்தம் செய்ய பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

Step 1: சூடான நீர்

முதலில், ½ வாளி வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும், அதில் 1 ஸ்பூன் லேசான பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைச் சேர்க்கவும். நன்றாக கலந்து அதன் உள்ளே அனைத்து பில்டிங் பிளாக்ஸ் செட்டுகளையும் வைக்கவும்.

Step 2: ஊறவைக்கவும்

பில்டிங் பிளாக்ஸ் செட்டுகளை, குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும். இது அழுக்கை தளர்த்தி, பிளாக்ஸை எளிதாக சுத்தம் செய்ய உங்களுக்கு உதவும்.

விளம்பரம்Buy Domex

Step 3: பிரஷ்

இப்போது செட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து சுத்தமான பல் தூரிகை பிரஷ் அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தி அதை சுத்தம் செய்யுங்கள்.

Step 4: கழுவவும்

இப்போது குழாயிலிருந்து வரும் நீரில், செட்டுகளை ஒவ்வொன்றாக கழுவவும்.

Step 5: உலர்த்தவும்

இப்போது உலர்ந்த பருத்தி துணியால் அவற்றை துடைத்து, உலர வைக்கவும். துணி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Step 6: காற்றில் உலர்த்தவும்

இப்போது தரையில் ஒரு சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் கவர் வைத்து அதன் மேல் செட்டுகளை பரப்பவும். இயற்கையாக உலர வைக்கவும்.

Step 7: பத்திரமாக எடுத்து வைக்கவும்

உலர்த்திய பிறகு, உங்கள் சிறிய குழந்தை அடுத்த முறை விளையாடும் வரை அவற்றை சுத்தமான இடத்தில் சேமித்து வைப்பது முக்கியமாகும். அழுக்கான இடத்தில் சேமித்தால், மீண்டும் செட்டுகள் அழுக்காகி விடும். எனவே செட்டுகளை ஒரு சுத்தமான பை / பெட்டியில் சேமிக்கவும்.

உங்கள் குழந்தை இப்போது வேடிக்கையான செட்டுகளுடன் பாதுகாப்பாக விளையாடுவதோடு அவர்களின் கற்பனைத் திறனையும் மேம்படுத்திக் கொள்ளலாம்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது