
தற்போதைய காய்ச்சல் பருவத்தில், நீங்கள் வீட்டில் உடல்நிலை சரியில்லாத குடும்ப உறுப்பினரைக் கொண்டிருந்தால் இன்னும் கவலை கூடும். நமக்கு ஏற்கனவே குழப்பமான தகவல்களின் அதிக சுமை உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும், நீங்கள் பீதி அடையக்கூடாது. கீழே குறிப்பிட்டுள்ளபடி சில அடிப்படை மற்றும் நம்பகமான நடவடிக்கைகளை மேற்கொள்வது,நோய் தொற்று மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு பரவாமல் தடுக்க உதவுகிறது.
1: உடல்நிலை சரியில்லாத நபர்க்குறிய சுகாதார பழக்கம்
உடல்நிலை சரியில்லாத நபர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அவர்கள் வீட்டிலேயே இருத்தலும் , தொற்றுநோயைப் பரப்பாமல் இருத்தலும் நல்லது. முக கவசம் அணிவது நல்லது. இருமல் அல்லது தும்மும்போது திசுவால் வாயை மூடிக்கொள்ள அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். சோப்பு மற்றும் தண்ணீரில் அவர்கள் அடிக்கடி கைகளை கழுவுவது அல்லது லைஃப் பாயிலிருந்து கிடைக்கும் ஆல்கஹால் சார்ந்த ஹேண்ட் சானிடைஸரை பயன்படுத்துவது நல்லது.
2: பராமரிப்பாளர்களுக்கான சுகாதார பழக்கம்
நேசிப்பவரை நன்கு கவனித்துக் கொள்ள, முதலில் உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் உடல்நிலை சரியில்லாத குடும்ப உறுப்பினரைச் சுற்றி இருக்கும்போது முகக் கவசம் அணிவதை உறுதிசெய்யுங்கள். மேலும், உங்கள் கைகள் சரியாகக் கழுவப்படாவிட்டால் உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும். சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள், அல்லது ஒரு சானிடைஸரைப் பயன்படுத்துங்கள். முகப்பு அறை, குளியலறை அல்லது சமையலறை போன்ற பகிர்ந்த இடங்களை நன்கு காற்றோட்டமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.
3: மேற்பரப்புகளுக்கு
கிருமிகள் தும்மலுக்குப் பிறகு 3 அடி வரை பயணிக்கலாம், தேவையற்ற தொற்றுநோய்களைப் பர ப்பி வீட்டைச் சுற்றியுள்ள வெவ்வேறு பரப்புகளில் தங்கிவிடலாம். வீட்டில் சில மேற்பரப்புகளை நாள் முழுவதும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அடிக்கடி தொடுகின்றனர். அதிகமாக தொடக்கூடிய மேற்பரப்புகள் என்று கருதப்படும், சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், மேஜைகள், குழாய்கள், கேபினட் கைப்பிடிகள், கழிப்பறை இருக்கைகள், ஃப்லஷ் கைப்பிடிகள், தொலைபேசிகள், மடிக்கணினி விசைப்பலகைகள் போன்றவை ஆகும். இந்த மேற்பரப்புகளை தினமும் சுத்தம் செய்வது நல்லது.
வழக்கமான வீட்டு சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி அவற்றின் தூசி அல்லது அழுக்கை சுத்தம் செய்யுங்கள். இப்போது மேற்பரப்புகள் சுத்தமாக இருப்பதால், நீங்கள் அவற்றை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். டொமெக்ஸ் தரை கிளீனர் போன்ற ப்ளீச் அடிப்படையிலான (சோடியம் ஹைபோகுளோரைட்) தயாரிப்பு கொண்ட பொருத்தமான கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள், இது கிருமிகளைக் கொல்லும். ஒரு சிறிய மறைவான பகுதியில் அதை முதலில் எப்போதும் சோதித்து, பிறகு அதன் தன்மையை சரி பார்த்ததும் , மற்ற இடங்களில் உபயோகிக்கவும்.
4: சலவைக்கு
மேற்பரப்புகள் மட்டுமல்ல, துணிகளால் கூட கிருமிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். உங்கள் துணிகளிலிருந்து கிருமிகளை அகற்றுவதற்கான எளிய வழிகளில் ஒன்று, அவற்றிற்கு ஒரு நல்ல சலவையை கொடுப்பதாகும். சோப்பினால் துணிகளை நன்கு கழுவுவது கிருமிகளை அகற்ற போதுமானது. விரிப்புகள் மற்றும் துணிகளுக்கு ரின் ஆலா போன்ற ப்ளீச் (சோடியம் ஹைபோகுளோரைட்) பயன்படுத்தலாம். ரின் ஆலா சோடியம் ஹைபோகுளோரைட் ப்ளீச் என்பதால் வெள்ளை ஆடைகளில் மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. வண்ண ஆடைகளில் பயன்படுத்த வேண்டாம்.
சலவை பொருட்களை உங்கள் உடலில் இருந்து வி லக்கி வைத்திருப்பது முக்கியம், மற்றும் அவற்றை கழுவி வெளுக்கும்போது களைந்துவிடும் கையுறைகளை அணிய வேண்டும். ஒரு சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தினால், சலவை அல்லது ஆடை பொருட்களின் லேபிள்களில் உள்ள அறிவுரைக்கு ஏற்ப, பொருத்தமான நீர் வெப்பநிலை அமைப்பைப் பயன்படுத்தி துணிகளை துவைக்கவும்.
உங்கள் கையுறைகளை கழற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பிறகு, சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள், அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சானிடைஸரை பயன்படுத்துங்கள். உடைகள் வெயிலில் காயவைக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.
5: தனிநபர்க்குரிய வீட்டுப் பொருட்களுக்கு
ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தனித்தனி தட்டுகள், கண்ணாடிகள் மற்றும் குவளைகள் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், அவற்றை ஒரு நல்ல பாத்திரங்கழுவி சோப்பு பய ன்படுத்தி தவறாமல் நன்கு கழுவ வேண்டும். துண்டுகள் அல்லது படுக்கைகள் கூட குடும்ப உறுப்பினர்களிடையே பகிரப்படக்கூடாது, தொடர்ந்து மாற்றப்பட வேண்டும். மற்ற அனைத்து வீட்டு பொருட்களையும் சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் அல்லது ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
உங்கள் குடும்பத்தை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க இந்த முக்கியமான, எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.