உங்கள் காட்டன் ஷர்ட்டுகள் நீடித்து உழைக்க வேண்டுமா? இதோ சூப்பர் ஈஸியான குறிப்புகள்!

உங்களுடைய காட்டன் ஷர்ட்டுகள் உங்களுடைய அலமாரியில் பொலிவிழந்து காணப்படுகிறதா? அவை நீடித்து உழைத்திடச் செய்ய இந்த ஆற்றல் வாய்ந்த மற்றும் சூப்பர் சுலப குறிப்புகளை பயன்படுத்தவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

want your cotton shirts to last longer try these super easy tips
விளம்பரம்
Comfort core

காட்டன் ஷர்ட்டுகள் சௌகரியமானது, அணிந்திட சுகமானது, தினம் தினம் அணிந்து மகிழ்ந்தாலும் அலுப்பு ஏற்படுவதில்லை. ஆனால் வழக்கமாக அணிந்து சரியாக பராமரிக்கவில்லை என்றால், உங்கள் காட்டன் ஷர்ட்டுகள் மங்கலாக தோற்றமளிக்கும், பொலிவற்று காணப்படும்.

இவ்வாறு நடக்காதிருக்க, இந்த எளிமையான பயன்மிகு குறிப்புகளை நடைமுறைப்படுத்துங்கள்.

நீங்கள் உங்களுடைய காட்டன் ஷர்ட்டுகளை துவைக்கும்போது உட்புறத்தை வெளிப்புறமாக திருப்பி மாற்றிக்கொள்ளவும் மற்றும் அவற்றை ஒரு வலைப் பையில் போட்டு துவைக்கவும். இது கிழிந்துவிடாமல் தடுக்கும் மற்றும் நிறம் மங்குவதையும் தவிர்க்கும்.

1) பட்டன் போட்டு ஜிப் போட்டுவிடவும்

துவைப்பதற்கு முன்பு, ஆடைகளுக்கு பட்டன் போட்டு ஜிப் போட்டுவிடவும். இதனால் மற்ற ஆடைகளுடன் அல்லது அவைகளுக்குள்ளாகக்கட சிக்கலிட்டுக் கொள்ளாமல் இருக்கும்.

விளம்பரம்
Comfort core

2) ஒரு வலைப் பையை உபயோகிக்கவும்

உங்களுடைய மென்மையான காட்டன் ஷர்ட்டுகளை துவைப்பதற்கு ஒரு வலைப் பையை உபயோகிக்கவும். அவை சேதமடையமால் தடுப்பதற்கு, குறிப்பாக நீங்கள் பலதரப்பட்ட துணிகளுடன் சேர்த்து துவைக்கும்போது, இது மிகச் சிறந்த உபாயமாக இருக்கும்.

3) ஒரு ஃபேப்ரிக் சாஃப்ட்னர் உபயோகிக்கவும்

உங்களுடைய காட்டன் ஷர்ட்டுகளை புதுப் பொலிவுடன் வைத்திருப்பதற்கு, ஒரு ஃபேப்ரிக் சாஃப்ட்னர் உபயோகிக்கவும். துணி அலசும் சுற்றின்போது டிரம்மிற்குள் 2 சொட்டு சேர்க்கவும். ஃபேப்ரிக் சாஃப்ட்னர்கள் உங்களுடைய காட்டன் ஷர்ட்டுகளை மென்மையாகவும் புதுமை மாறாமலும் வைத்திருக்கும்.

4) வாஷரில் ஓவர்லோடு கூடாது

உங்கள் வாஷரில் அதிக சுமையுடன் பலதரப்பட்ட துணிகளை போட்டு வேலையை முடிப்பது சுலபமான வழியாக தோன்றலாம். ஆனால் இது உங்களுடைய காட்டன் ஷர்ட்டுகளை பாழாக்கிவிடக்கூடும். ஆகவே எப்போதும் சுமை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளவும்.

5) வாஷ் கேர் லேபிளை வாசிக்கவும்

எப்போதும், நாம் அதை மறந்துவிடும் போக்குடையவர்கள். எப்போதும் உங்கள் காட்டன் ஷர்ட்டுகளின் வாஷ் கேர் லேபிளை கவனமாக படிக்கவும். உங்களுடைய காட்டன் ஷர்ட்டுகளை எவ்வாறு துவைக்க வேண்டும் என்பதற்கான அனைத்து விதிமுறைகளும் அதில் அடங்கி இருக்கும்.

உங்கள் காட்டன் ஷர்ட்டுகளின் ஆயுள் அதிகரிக்க இந்த குறிப்புகளை எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருக்கவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது