உங்களுடைய டெனிம்ஸ் நீடித்து உழைக்க வேண்டுமா? இதோ எளிதான உத்திகள்!

டெனிம்ஸ்-ன் சரியான ஜோடி உங்களுடைய ஸ்டைலை மேம்படுத்தும், உங்களுடைய டெனிம்ஸை நீடித்து உழைக்கச் செய்ய மற்றும் பிரகாசமாக தோன்றச் செய்ய இந்த உத்திகளை பயன்படுத்துங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

are-your-denims-fading-away-faster-than-they-should
விளம்பரம்
Comfort core

ஒரு நாள் அல்லது ஒரு நாள் வெளியே செல்லும்போது நீங்கள் அணியும் பெரும்பாலான உடைகளுள் முக்கிய இழையாக ஒருங்கிணைந்த பாகமாக விளங்குவது டெனிம்தான். நீங்கள் புதிதாக வாங்கிய டெனிம்ஸ் ஜோடியாக இருந்தாலும் சரி அல்லது ஏற்கனவே உங்களிடம் உள்ள சிறந்த சிலவாக இருந்தாலும் சரி, அவற்றின் வாழ்நாளை அதிகரித்திடச் செய்ய, இதோ சில பயனுள்ள உத்திகள்.

  • அடிக்கடி துவைப்பதை தவிர்க்கவும்

உங்கள் டெனிம்ஸை அடிக்கடி துவைப்பதை தவிர்க்கவும். இதனால் கலர் மங்கிப்போக காரணமாகலாம் மற்றும் இழையின் தரம் பாதிக்கப்படுவதன் காணமாக அதனுடைய வடிவம் சிதைந்து போகலாம்.

  • உட்புறத்தை வெளிப்புறமாக திருப்பிக்கொள்ளவும்

உங்கள் டெனிம்ஸை துவைக்கும்போது, அவற்றின் உட்புறத்தை வெளிப்புறமாக திருப்பிக்கொள்ளவும் மற்றும் குளிர்ந்த நீரில் துவைக்கவும். இதனால் உங்கள் டெனிம்ஸின் கலர் கலைந்துவிடாமல் இருக்க உதவுகிறது.

  • குறைவான டிடெர்ஜென்ட் உபயோகிக்கவும் அல்லது மாற்று முயற்சித்துப் பார்க்கவும்

விளம்பரம்
Comfort core

நீங்கள் டிடெர்ஜென்ட் பயன்படுத்துபவராய் இருந்தால், நீங்கள் வழக்கமாக மற்ற துணிகளுக்கு பயன்படுத்துவதைவிட குறைவாக பயன்படுத்தவும். மேலும் நீங்கள் வினிகர் மற்றும் ரப்பிங் அல்கஹால் போன்றவற்றை மாற்றாக உபயோகிக்கலாம். ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி உப்புடன் 2 மேசைக்கரண்டி வினிகர் அல்லது ரப்பிங் அல்கஹால் சேர்க்கவும் மற்றும் நன்றாக கலக்கவும். இப்போது, இந்த கரைசலை நேரடியாக உங்கள் டெனிம்ஸை துவைக்கும்போது வாஷ் சைக்கிலில் சேர்த்துவிடவும். இது உங்கள் டெனிம்ஸின் கலரை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது மற்றும் அவை புத்துணர்ச்சி மணம் கொண்டதாக விளங்கச் செய்கிறது.

  • டெனிம்ஸை ஃப்ரீஸிங் செய்யவும்

உங்கள் டெனிம்ஸை ஓர் இரவு முழுவதும் ஃப்ரீஸரில் வைக்கவும். இது வாடை உண்டாக்கும் பேக்டீரியாவை ஒழித்துக்கட்ட உங்களுக்கு உதவுகிறது.

  • காற்றில் உலர்த்தவும்

உங்கள் டெனிம்ஸை டிரையரில் உலர்த்துவதை தவிர்க்கவும், சூடு இழைகளை பாதிக்கச் செய்யலாம் மற்றும் அவை சுருங்கவும் செய்யலாம். மேலும் நிறம் மங்குவதற்கும் காரணமாகலாம். அதற்கு பதிலாக காற்றில் உலர்த்தவும், இதனால் நீங்கள் நிச்சயமாக உங்கள் டெனிம்ஸின் ஆயுளை அதிகரிக்கச் செய்யலாம்

மேற்கண்ட உத்திகள் உங்கள் டெனிம்ஸை பேணி பாதுகாப்பதில் மற்றும் நீடித்து உழைக்கச் செய்வதில் மிகவும் பயனுடையதாக இருக்கலாம்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது