உங்களுக்குப் பிடித்த டெனிம் ஜாக்கெட்டை பராமரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்!

உங்களுக்கு பிடித்த டெனிம் ஜாக்கெட்டுகள் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமா? இந்த அருமையான பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் குறிப்புகளை பின்பற்றவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Tips to Care for Your Favourite Denim Jacket!
விளம்பரம்
Comfort core

 டெனிம் ஜாக்கெட் என்பது பன்முகத்தன்மை கொண்ட உங்கள் அலமாரியில் வைத்திருக்க வேண்டிய அருமையான ஒரு உடையாகும். இதை உங்கள் இனிமையான சந்திப்புகளுக்காக, உயர் இடுப்பு கால்சட்டையுடன் அணியலாம் . அல்லது இயல்பான நடை பயிற்சி செய்யும் உடையுடனும் அணியலாம். நீங்கள் புதிதாக ஒரு டெனிம் ஜாக்கெட் வாங்கினாலோ, உங்களுக்கு பிடித்தமான பழசாகவோ இருந்தாலும் சரி, உங்களின் டெனிம்களை பாதுகாக்கும் சிறப்பான குறிப்புகளை கீழே காணவும்.

Step 1: வினிகர் சிகிச்சை

 ஒரு வாளி குளிர்ந்த நீரில், காய்ச்சி வடிகட்டிய வினிகரை ஒரு கப் சேர்த்து, அதில் உங்கள் டெனிம் ஜாக்கெட்டை விடவும்.  30 நிமிடங்கள் கழித்து, கைகளால் ,மென்மையான சோப்பு போட்டு தேய்த்து கழுவவும். வினிகர் உங்கள் டெனிம் ஜாக்கெட் நிறத்தை நன்கு காப்பதோடு துணியை மென்மையாகவும் மாற்றும்.

Step 2: உலர்த்தும் நுட்பம்

துவைத்த பின், உங்கள் டெனிம் ஜாக்கெட் உள்புறத்தை வெளிப்புறம் எடுத்து நிழலில் உலர வைக்கவும். நேரடி சூரிய ஒளியில் உலர்த்தினால் நிறம் மங்கி ,துணி சுருங்கி விடும். நீர் சொட்டுவதை தடுக்க கீழே ஒரு துண்டு விரித்துக் கொள்ளவும்.

விளம்பரம்

Comfort core

Step 3: இரவில் உறைய வைக்கவும்

உங்கள் டெனிம் ஜாக்கெட்டை நேர்த்தியாக மடித்து காற்றுப்புகாத பையில் அடைத்து, இரவில் உறைவிப்பான் உள்ளே வைக்கவும். இது துர்நாற்றத்தை ஏற்படுத்தும் எந்த பாக்டீரியாவையும் கொல்லும். ஆமாம், இது உண்மையிலேயே வேலை செய்யும்.

அவ்வளவு தான்! மேல்கண்ட உதவிக் குறிப்புகளை பின்பற்றி, இப்போது அந்த டெனிமை பொலிவுடன் உடுத்துங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது