உங்கள் கைத்தறி காட்டன் பாவாடையை சிறந்த முறையில் பராமரிப்பது எப்படி

கைத்தறியால் செய்யப்பட்ட காட்டன் பாவாடைகளின் சிறப்பே, அதை நாம் நவநாகரீக உடையாகவும் அணியலாம், கலாச்சார உடையாகவும் அணியலாம். அதனை எவ்வாறு சிறந்த முறையில் பேணிக்காக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Take Care of Your Handloom Cotton Skirt
விளம்பரம்
Comfort core

கைத்தறியால் செய்யப்பட்ட காட்டன் பாவாடைகள் கோடை காலங்களில் மிகவும் விரும்பப்படும் ஒரு பிரதானமான உடையாகும். இதன் நவநாகரீக அழகாலும் காற்றோட்டமான தன்மையாலும் , இதை உடுத்துபவருக்கு இது ஒரு தனித்தன்மையான அழகை கொடுக்கிறது. இதை நீங்கள் வேலைக்கு உடுத்திச்செல்லவும், கோடை காலத்தில் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது உடுத்திச்செல்லவும் பயன்படுத்தலாம். இருந்தாலும், கைத்தறியால் செய்யப்பட்டதால் இந்த பாவாடையை எப்பொழுதும் அதிக கவனத்துடன் கையாள வேண்டும். அவ்வாறு கையாண்டால், அதை நீண்ட நாட்களுக்கு நல்ல நிலையில் வைத்திருக்க முடியும்.

உங்கள் காட்டன் கைத்தறி பாவாடையை பராமரிப்பதற்கு ஏற்ற சில எளிதில் செய்யக்கூடிய உதவிக் குறிப்புகளை நாங்கள் இங்கே வழங்கியுள்ளோம்.

1) குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்

உங்கள் காட்டன் கைத்தறி பாவாடையை எப்பொழுதும் குளிர்ந்த நீரிலேயே துவைக்க வேண்டும். ஏனென்றால் சூடான நீரை உபயோகப்படுத்துவது, துணியை சுருங்கச் செய்வதோடு நிறத்தையும் வெளுத்துப் போகச் செய்துவிடும்.

2) கைகளால் துவைக்கவும்

விளம்பரம்

Comfort core

உங்கள் பாவாடை, மென்மையான துணி இழைகளைக் கொண்டது எனவே அதை எப்பொழுதும் குளிர்ந்த நீரைக் கொண்டு கைகளாலேயே துவைக்க வேண்டும். துணி துவைக்கும் இயந்திரத்தில் துவைத்தால், துணி இழைகள் பாதிப்படையக்கூடும்.

3) லேசான சோப்பு தூளை பயன்படுத்தவும்

எப்பொழுதும் உங்கள் பாவாடையை லேசான சோப்புத் தூளை பயன்படுத்தியே துவைக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். 1/2 வாளி குளிர்ந்த நீரில், 1/2 கப் லேசான சோப்பு தூளை கலந்து உங்கள் பாவாடையை அதில் போடவும். 10 நிமிடங்கள் உங்கள் பாவாடையை அதிலே ஊறவைக்கவும். பிறகு  உங்கள் பாவாடையை சாதாரண நீரில் மெதுவாக அலசி எடுக்கவும். மென்மையான சோப்புத்தூளுக்கு எங்களது உசிதமான தேர்வு ஸர்ஃப் எக்ஸல் ஈஸி வாஷ்

4) நிழலான பகுதியில் உலர்த்தவும்.

உங்கள் காட்டன் கைத்தறி பாவாடையை நிழலான பகுதியில் உலர்த்தவும். ஏனென்றால் நேரடி சூரிய ஒளி, அதன் நிறத்தை வெளுத்துப் போகச் செய்துவிடும். ஒரு சமமான தரையில் ஒரு டவலை விரித்து அதன்மேல் உங்கள் பாவாடையை விரித்தும் உலர்த்தலாம்.

5) குறைந்த வெப்ப அமைப்பில் இஸ்திரி செய்யவும்

நீங்கள் உங்கள் கைத்தறி காட்டன் பாவாடையை இஸ்திரி செய்ய விரும்பினால் குறைந்த வெப்ப அமைப்பை உபயோகப்படுத்தவும். கூடுதல் பாதுகாப்பிற்காக உங்கள் பாவாடையின் மேல் ஒரு காட்டன் டவலை விரித்து அதற்கு மேல் இஸ்திரி செய்யலாம்.

அவ்வளவுதான்! உங்கள் காட்டன் பாவாடையை அலமாரியில் எடுத்து வைக்கும் முன்னர் ஒரு மஸ்லின் துணியிலோ அல்லது சுத்தமான ஒரு காட்டன் துணியிலோ அதை சுற்றி வைக்கவும். இவ்வாறு செய்தால் அதில் காற்று புக வசதியாக இருக்கும். உலோகத்தினால் ஆன ஹேங்கரில் அதை தொங்கவிட வேண்டாம், ஏனென்றால் அது உங்கள் பாவாடையில் துரு கறையை ஏற்படுத்தி விடும். நீங்கள் சிலநாட்களுக்கு உங்கள் பாவாடையை அணியப்போவதில்லை என்றால், அதன் ஒவ்வொரு மடிப்பிலும் 1-2 வேப்ப இலைகளை வைக்கவும், இது பூச்சிகள் வராமல் காக்கும்.

இந்த அருமையான உதவி குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் கைத்தறி காட்டன் பாவாடையை நீண்ட நாட்களுக்கு நல்ல நிலையில் பாதுகாத்து வைக்கலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது