உங்கள் காட்டன் ஜிம் பேன்ட்களை பராமரித்து அதன் வடிவத்தை இழக்காமல் தக்க வைக்க சில அருமையான வழிகள்

காட்டன் ஜிம் பேன்ட்கள் நகர்ப்புறங்களில் பிரதானமாக உடுத்த கூடிய ஒரு பிரபலமான உடையாகும். உங்கள் ஜிம் பேன்ட்களை சிறந்த முறையில் பராமரிக்கவும் அதன் வடிவத்தை இழக்காமல் பார்த்துக்கொள்ளவும் இந்த எளிய வழிகளை பின்பற்றவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Take Care For Your Cotton Gym Pants to Retain Their Shape
விளம்பரம்
Comfort core

காட்டன் ஜிம் பேன்ட்கள், பெரும்பாலும் நல்ல காற்றுப் புகக் கூடிய தன்மையை கொண்டவையாகும் மற்றும் அவற்றை எடுத்துச் செல்லவும் எளிதான ஒன்றாகும். உங்களுடைய பேன்ட்டை எப்பொழுதும் சிறந்த நிலையில்  நீங்கள் வைத்திருக்க விரும்பினால் இதோ உங்களுக்கான கையேடு, இதிலிருக்கும் உதவிக் குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கவும்!

1) குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்

உங்கள் பேன்ட்களை மிகவும் மென்மையான முறையில் துவைக்கவும். ஒரு நல்ல லிக்விட் சோப்பை பயன்படுத்தி, உங்கள் பேன்ட்டை குளிர்ந்த நீரில் துவைப்பது நல்லது . நீங்கள் துணி துவைக்கும் இயந்திரத்தில் உங்கள் பேன்ட்டை துவைக்க எண்ணினால், ஸர்ஃப் எக்சல் மேடிக் லிக்விடை பயன்படுத்தவும், ஏனென்றால் அது தண்ணீரில் முழுவதுமாக கரையக்கூடியது , மேலும் சலவைக்குப் பின் அது எந்த ஒரு பொடி போன்ற மிச்சத்தையும் துணிகளின் மேல் படிய விடாது.

2) பிழிவதை தவிர்க்கவும்

 உங்கள் காட்டன் பேன்ட்களை துவைத்த பின்னர் ஒரு போதும் அதை பிழியக்கூடாது. அதை ஒரு தடிமனான காட்டன் டவலில் சுற்றி, அதை மெதுவாக அழுத்தி அதிலிருந்து நீரை வெளியேற்ற வேண்டும். இந்த செயல்முறையை மீண்டும் சில முறை செய்து, நீரை முழுவதுமாக வெளியேற்றவும்.

விளம்பரம்

Comfort core

3) உங்கள் பேன்ட்களை ஒரு சமமான தரையில் விரித்து உலர்த்தவும்

உங்கள் காட்டன் ஜிம் பேன்ட்களை துவைத்த பின்னர் ஒரு சமமான தரையில் விரித்து உலர்த்த வேண்டும். அவற்றை எக்காரணத்தை கொண்டும் தொங்க விட்டு உலர்த்த வேண்டாம் ஏனெனில் தொங்க விடுவதால் துணி இழுக்கப்பட்டு அதன் வடிவத்தை இழந்து விடும். உங்கள் பேன்ட்களை தளர்வாக மடித்து சேமித்து வைக்கவும். 

4) சரியான முறையில் இஸ்திரி செய்யவும்

உங்கள் ஜிம் பேன்ட்கள் கசங்கிப் போய் காணப்பட்டால் அதை இஸ்திரி செய்வதன் மூலம் மறுபடியும் கச்சிதமாக மாற்றலாம். ஆனால் மறக்காமல் இஸ்திரி பெட்டியில் குறைந்த வெப்ப அமைப்பை பயன்படுத்தவும் , அதுமட்டுமின்றி இஸ்திரி செய்வதற்கு முன்னர் உங்கள் பேன்டின் உள் பக்கத்தை வெளிப்பக்கமாக திருப்பி விடவும். கூடுதல் பாதுகாப்பிற்கு, நீங்கள் ஒரு காட்டன் டவலை உங்கள் பேன்டின் மீது விரித்து அதற்கு மேல் இஸ்திரி செய்யலாம், இது உங்கள் பேன்ட் பாதிப்படையாமல் காக்கும். 

மேலும் உங்கள் ஒர்க் அவுட் பையில் நீண்ட நேரம் உங்கள் ஜிம் பேன்ட்களை திணித்து வைக்காதீர்கள், ஏனென்றால் அதிலுள்ள வியர்வை மற்றும் ஈரப்பதம் பூஞ்சையை வளரச் செய்யும். நீங்கள் உடற்பயிற்சியை முடித்த உடனே அதனை உலர்த்தி விடவும். 

அவ்வளவுதான். உங்கள் காட்டன் ஜிம் பேன்ட்களை நன்றாக பராமரித்து, சிறந்த நிலையில் வைத்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை மேலும் உற்சாகமாக்கவும்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது