உங்கள் பருத்தி ஆடைகளை துவைக்க சரியான வழி உங்களுக்குத் தெரியுமா?

சிலர் வெதுவெதுப்பான நீரில் காட்டன் துணியை கைகளால் துவைக்கிறார்கள், ஆனால் அது நல்ல யோசனையா? நாங்கள் உங்களுக்கு தெளிவான விளக்கத்தை தருகிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Do You Know the Right Way to Wash Your Cotton Clothes? Here’s Your Handy Guide
விளம்பரம்
Comfort core

உங்கள் பருத்தி துணிகளை துவைக்கும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன. இவை உங்கள் காட்டன் ஆடைகளை புதிய நிலையில் வைக்க உதவுகின்றன. உங்கள் பருத்தி ஆடைகளை சரியான முறையில் துவைப்பது எப்படி என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.

1) சுருக்கத்தை தடுக்க

அரை வாளி குளிர்ந்த நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை கலக்கவும். துவைக்கும் முன், உங்கள் பருத்தி ஆடைகளை இந்த கரைசலில் 20-30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இது துணி சுருங்குவதைத் தடுக்க உதவுகிறது.

2) சாயம் போவதை தடுக்க

பருத்தி ஒரு மென்மையான துணி ஆகும். மென்மையான சுழற்சியில் உங்கள் பருத்தி சேலையை இயந்திரத்தில் துவைப்பதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கையால் துவைப்பது எப்போதும் சிறந்தது. இது நிறத்தை பூட்ட உதவுகிறது மற்றும் துவைக்கும் போது சாயம் போவதை தடுக்கிறது. மேலும், வெள்ளை மற்றும் அடர் நிற காட்டன் ஆடைகளை தனித்தனியாக துவைக்கவும்.

விளம்பரம்
Comfort core

3) துணி இழைகள் தளர்வதை தடுக்க

உங்கள் பருத்தி ஆடைகளை மற்ற ஆடைகளிலிருந்து தனியே பிரித்து வைக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் பருத்தி ஆடைகளை வெவ்வேறு பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளுடன் சேர்த்து துவைக்க வேண்டாம். இது உங்கள் பருத்திகளின் இழைகள் தளர்வதையும் பிரிவதையும் தடுக்கும். இவ்வாறு செய்தால் உங்கள் பருத்தி ஆடைகளை பல சலவைகளுக்கு பிறகும் அழகாக வைத்திருக்க முடியும்.

4) லேசான சோப்புத்தூளை பயன்படுத்தவும்

பருத்திக்கு மென்மையான கையாளுதல் மற்றும் கவனிப்பு தேவை. லேசான சோப்பை பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் பருத்தி துணிகளை நீங்கள் கைகளால் துவைத்தால், சர்ப் எக்செல் ஈஸி வாஷைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். நீங்கள் ஒரு வாலி சாதாரண நீரில் , அரை கப் வினிகர், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து உங்கள் பருத்தி துணியை இந்த கலவையில் அலசலாம்.

அவ்வளவுதான்! துவைத்த பின், உங்கள் பருத்தி சேலையை ஓரளவு நிழலான இடத்தில் காய வைக்கவும். நேரடி சூரிய ஒளியை அதன் மேலே பட வைக்க வேண்டாம், ஏனெனில் துணி சுருங்கி மங்கிவிடும். உங்கள் காட்டன் ஆடைகளை நீங்கள்  வரிசையாக உலர்த்த தொங்கவிடலாம்.

பருத்தி உடைகள் ஸ்டைலானவை, எடுத்துச் செல்ல எளிதானவை. உங்கள் பருத்தி ஆடைகளின் ஆயுட்காலம் அதிகரிக்க இந்த பயனுள்ள உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது