உங்கள் பிளாக் பிரிண்டட் காட்டன் சட்டைகளின் நிறத்தை சாயம் போவதிலிருந்து தடுப்பது எப்படி

காட்டன் சட்டைகள் கவனிக்கப்படாவிட்டால், மற்றும் சரியான வழியில் துவைக்கப்படாவிட்டால் அவை வேகமாக மங்கிவிடும். அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது இங்கே காணலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Prevent the Colour of Your Block Printed Cotton Shirts from Bleeding
விளம்பரம்
Comfort core

காட்டன் ஆடைகள் உங்கள் அலமாரியை ஆக்கிரமித்துள்ளதா? நல்லதுதான். ஏனென்றால் காட்டன் மென்மையானது, லேசானது மற்றும் காற்றோட்டமானது, மேலும் பல இந்திய வடிவமைப்பாளர்களின் விருப்பமான துணி இதுவாகும். உங்கள் காட்டன் சட்டைகளை நீங்கள் சரியாக கவனித்தால், அவை பல ஆண்டுகள் நீடிக்கும். இருப்பினும், உங்கள் காட்டன் சட்டைகள் மங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கவலைப்பட வேண்டாம், இந்த எளிய சலவை உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம். மேலும் அவற்றை மங்கிப் போகாமலும், நிறம் மாறாமலும் பாதுகாக்கலாம்.

இதோ துவங்கலாம்.

1) உப்பு நீரில் ஊற வைக்கவும்

உங்கள் பிளாக் பிரின்டட் காட்டன் சட்டையை துவைக்கும் முன், அதை ஊறவைப்பது நல்லது.

அரை வாளி குளிர்ந்த நீரில், 2 தேக்கரண்டி கல்லுப்பு சேர்க்கவும். உங்கள் சட்டையை அதில் போடுங்கள். துவைப்பதற்கு முன் ஒரு மணி நேரம் இதில் ஊற விடவும். இது உங்கள் சட்டையின் நிறத்தை பூட்டி, சாயம் போகாமல் பாதுகாக்கும்.

விளம்பரம்

Comfort core

2) மென்மையாக துவைக்கவும்

மென்மையான சலவை முறைகளைத் தேர்வுசெய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் காட்டன் சட்டையை கையால் துவைக்கலாம் அல்லது மென்மையான சுழற்சியில் இயந்திரத்தில்  துவைக்கலாம்.

3) குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்

உங்கள் காட்டன் சட்டைகளை எப்போதும் குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது உங்கள் காட்டன்ஸின் வடிவத்தையும் அமைப்பையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. சூடான நீரைப் பயன்படுத்துவது, துணியை சேதமாக்கி அதன் வடிவத்தை இழக்கச் செய்யும்.

4) லேசான சோப்பை பயன்படுத்தவும்

காட்டன் ஒரு மென்மையான துணி. இதை லேசான சோப்பினால் துவைக்க வேண்டும். 1 ஒரு வாளித் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் மென்மையான சோப்பு தூள் சேர்க்கவும் . இப்போது, ​​தண்ணீரில் சோப்பு சரியாக கலக்க உங்கள் கைகளை மெதுவாக சுழற்றுங்கள். சோப்பு கரைசலில் உங்கள் காட்டன் சட்டைகளை 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். மெதுவாக பிழியவும். பின்னர், நீங்கள் வழக்கம்போல அலசவும் மற்றும் துவைக்கவும் செய்யலாம். நீங்கள் ஒரு நல்ல லேசான சோப்பு தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சர்ப் எக்செல் ஈஸி வாஷைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம்.

5) பிரஷ் பயன்படுத்துவதை தவிர்க்கவும்

துவைக்கும் போது உங்கள் காட்டன் சட்டைகளை பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டாம் , அது துணியை சேதப்படுத்தும். அதற்கு பதிலாக, உங்கள் விரல்களைப் பயன்படுத்தி கறைகள் ஏதேனும் இருந்தால் தேய்க்கவும்.

6) நிழலில் உலர்த்தவும்

உங்கள் காட்டன் துணிகளை நிழலான இடத்தில் கிடைமட்டமாக–உலர வைக்கவும். உங்கள் காட்டன் துணிகளை சூரிய ஒளியில் நேரடியாக காயவைக்க வேண்டாம், ஏனெனில் அதன் நிறங்கள் மங்கி, துணி சுருங்கிவிடும்

இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் காட்டன் ஆடைகளை மங்காமல் வைத்திருக்கும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது