
பார்ட்டி என்பது அனைவரும் ஆசைப்படும் ஒன்றுதான். ஆனால், மக்கள் விரும்பாதது என்னவென்றால், அவர்களின் ஆடைகளில் உணவுப் பொருளோ அல்லது ஒயினோ சிந்தி விடக் கூடாது என்பதே. என்னதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் உணவு தவறுதலாக சிந்தி விடலாம். ஆனால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆடையில் ஒரு கறை ஏற்பட்டு விட்டால் அதனால் உற்சாகம் குறைய விட்டு விடாதீர்கள். இதற்கு என்ன செய்யலாம் என்றால் நீங்கள் அதைப் பார்த்தவுடன் உடனடியாக அந்தக் கறையை சுத்தம் செய்துவிட வேண்டும். பல்வேறு விதமான கறைகளை சுத்தப்படுத்தும் முறை கிட்டத்தட்ட ஒரேபோல் தான் இருக்கும். எனினும், நீங்கள் இந்த முறையை ஓரு சிறிதளவு மாற்றத் தேவையிருக்கலாம். அது அந்தக் கறையின் முக்கிய அம்சத்தைப் பொறுத்தது.
சரி எப்படி என்று பார்ப்போம்!
1. ஆயில் மற்றும் வெண்ணெய் கறைகளை அகற்றுதல்
கறை ஏற்பட்ட ஆடை பகுதியில் இரு பக்கங்களிலும் சிறிதளவு மாவு, டால்கம் பவுடர் மற்றும் கார்ன்ஸ்டார்ச்-ஐ தூவுங்கள். அப்படியே 30 நிமிடங்கள் விட்டு விடுங்கள். அதன் பின்பு பவுடரை உதறி கறை இன்னும் இருக்கிறதா என்று பாருங்கள். கறை போகவில்லை எனில் சில மிதமான டிஸ்வாஷிங் ஜெல் மூலம் இதமாக துடையுங்கள். பின்பு வெதுவெதுப்பான நீரில் ஆடையை அலசி விடுங்கள்.
2. டீ மற்றும் காஃபி கறைகளை அகற்றுதல்
ஒரு பாத்திரத்தில் 1/2 அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு 2 மேஜைக்கரண்டி வினிகரை ஊற்றி கலக்குங்கள். கறை ஏற்பட்ட ஆடை பகுதியில் இந்தக் கரைசலால் ஒற்றிய பின்பு ஆடையை அலசி விடுங்கள். கறை முழுவதும் போகும் வரை மீண்டும் மீண்டும் இப்படி செய்யுங்கள்.

3. கெட்ச்அப் கறைகளை போக்குதல்
கறைகள் பட்ட ஆடையை பைப்பில் இருந்து விழும் குளிர்ந்த தண்ணீரில் கழுவி அலசுங்கள். அதன் பின் அதன் மீது சிறிதளவு வினிகர் தடவுங்கள். நீங்கள் உங்கள் லாண்டரியில் இந்த ஆடையை சலவை செய்யப்போடும் முன்பு கறை பட்ட பகுதியில் சிறிதளவு கரைக்கப்பட்ட டிடர்ஜெண்டை தடவ வேண்டும்.
4. ரெட் ஒயின் கறைகளை அகற்றுதல்
ஒரு பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி வினிகர் மற்றும் 1/2 கப் ரப்பிங் ஆல்கஹால் (அல்லது ஹாண்ட் ஸானிடைசர்) நன்கு கலந்து கலவை ஆக்கிக் கொள்ளுங்கள். இந்தக் கலவையில் ஒரு துணியை முக்கி அந்த துணியால் கறையை துடையுங்கள். இந்த ஒயி ன் திரவம் முழுமையாக உறிஞ்சப்பட்டு கறை மறையும் வரை தொடர்ந்து துடையுங்கள். அதன் பின் உங்கள் வழக்கமான சலவையில் இந்த ஆடையையும் சேர்த்து சலவை செய்து விடலாம்.
இந்த விவேகமான மற்றும் ஆற்றல்மிக்க சுத்தப்படுத்தும் டிரிக்குகள் மூலம் நீங்கள் கவலையேதும் இன்றி உங்கள் பார்ட்டியை உற்சாகமாக கொண்டாடலாம்.