உங்கள் மென்மையான உள்ளாடைகளை மணம் வீச வைக்க எளிதான வழிகள்

உங்கள் உள்ளாடைக்கு ஒரு இனிமையான மணம் சேர்க்க, வழிகளை தேடுகிறீர்களா? உங்களுக்கான சில சிறந்த உதவிக்குறிப்புகள் எங்களிடம் உள்ளன. உங்கள் மென்மையான துணிகள் நறுமணத்தோடு இருக்க இந்த சுத்தப்படுத்தும் உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Easy Steps to Keep Your Delicate Lingerie Smelling Great
விளம்பரம்
Comfort core

நறுமணமான உள்ளாடை, நம் பகல்நேர புத்துணர்வை உறுதி செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். நல்ல வாசனையைத் தக்கவைக்க எளிய மற்றும் பயனுள்ள உதவிக்குறிப்புகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். இந்த கட்டுரையில், உங்கள் மென்மையான துணிகளை புதிய வாசனையுடன் வைத்திருக்க சில அற்புதமான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

படிநிலை 1: துணி மென்மையாக்கி

சலவை இயந்திரத்தில் உங்கள் உள்ளாடைகளை கழுவுகிறீர்கள் என்றால், 1 டேபிள்ஸ்பூன் மென்மையாக்கியை , அலசும் சுழற்சியின் போது சேர்க்கவும். உங்கள் உள்ளாடைகளை கைகளால் கழுவுகிறீர்களானால், அலசிய பிறகு ½  டேபிள் ஸ்பூன் துணி மென்மையாக்கியை ஒரு வாளி தண்ணீரில் சேர்க்கவும். 15-20 நிமிடங்கள் காத்திருந்த பின்னர், துணியை உலர வைக்கவும்.

படிநிலை 2: வினிகர்

வினிகர் , உங்கள் உள்ளாடைகளில் புதிய வாசனையை உண்டாக்கும். ½ வாளி மிதமான சூடுடைய தண்ணீரில், 1 டேபிள்ஸ்பூன் வெள்ளை வினிகர் சேர்க்கவும். உங்கள் மென்மையான துணிகளை இந்த வாளியில் மூழ்கடித்து 30 நிமிடங்கள் காத்திருங்கள். பிறகு நீங்கள் வழக்கம்போல கழுவலாம். வினிகர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுவதோடு , புதிய வாசனையையும் சேர்க்கிறது. 

விளம்பரம்

Comfort core

படிநிலை 3: அத்தியாவசிய எண்ணெய்கள்

½  கப் தண்ணீர் மற்றும் உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயின் 5-6 சொட்டுகள் அடங்கிய கலவையை உருவாக்கவும். 2-3 பருத்தி பந்துகளை எடுத்து இந்த கலவையில் ஊற வைக்கவும். பருத்தி பந்துகள் கரைசலில் ஊறவைத்தவுடன், அவற்றை ஒரு கண்ணி பையில் வைக்கவும். உங்கள் உள்ளாடைகளை சேமித்து வைக்கும் டிராயரில் அல்லது பெட்டியில் பையைத் தொங்க விடுங்கள். மலர் வாசனைக்கு, 3 சொட்டு ரோஜா அத்தியாவசிய எண்ணெயையும், 2 சொட்டு ஜெரனியம் அத்தியாவசிய எண்ணெயையும் கலக்கவும். கவர்ச்சியான வாசனைக்கு, 3 சொட்டு காரமான கருப்பு மிளகு அத்தியாவசிய எண்ணெய், 1 துளி எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய் மற்றும் 2 சொட்டு ய்லாங்-ய்லாங் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை கலக்கவும்.

படிநிலை 4: லாவெண்டர் நீர்

லாவெண்டர் நீர் உங்கள் உள்ளாடைகளை நன்றாக வாசனையாக்குவதற்கான மற்றொரு வழியாகும், இது சந்தையில் எளிதாகக் கிடைக்கும். உங்கள் சலவை இயந்திரத்தில் உங்கள் உள்ளாடைகளை கழுவுகிறீர்கள் என்றால், இதை அலசும் சுழற்சிக்கு முன், 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். 

உங்கள் உள்ளாடைகளை கைகளால் கழுவினால், 1 டேபிள்ஸ்பூன் லாவண்டர் நீரை, ஒரு வாளி தண்ணீரில் சேர்க்கவும். அதில் உங்கள் துணிகளை விடவும், உங்கள் உள்ளாடைகளை கழுவவும், உலர வைக்கவும் முன்னர், 15 நிமிடங்கள் காத்திருக்கவும். வாசனையை இன்னும் நீட்டிக்க, 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸை லாவண்டர் தண்ணீரில் சேர்க்கவும்.

இனிமையான மணம் கொண்ட உள்ளாடை, உங்களை புத்துணர்ச்சியுடனும் நிம்மதியாகவும் வைக்கும். எல்லா நேரங்களிலும் உங்கள் உள்ளாடைகளை நன்றாக வாசம் வீச செய்ய இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது