
நீங்கள் வருடத்தில் பெரும்பாலான காலங்கள் உங்களுடைய கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருக்கிறீர்கள், குளிர்காலம் வரும் நேரங்களில் மட்டுமே அவற்றை வெளியே எடுத்து பயன்படுத்துகிறீர்கள். பருவகாலம் முடிந்தவுடன் அவைகளை மீண்டும் எடுத்து வைப்பதற்கான ஒரு படிப்படியான செயல்முறை இங்கே இருக்கின்றது, உங்களுடைய ஆடைகளை நல்ல நறுமணத்துடன் வைத்திருக்க, அடுத்த பருவ காலத்தின் குளிர்கால மாதங்களில் உங்களைப் பாதுகாக்கப் புத்துணர்ச்சி தயாராக இருக்கின்றது!
படிநிலை 1: லேசான சலவைத்தூளுடன் துவைக்கவும்
உங்களுடைய கம்பளி ஆடைகளை முக்கியமாகக் குளிர்காலத்தில் உபயோகப்படுத்துவதால், அவற்றை சேமித்து வைத்திருப்பதால் தூசி மற்றும் பூச்சிகளானது அவற்றில் சேரும். எனவே, குளிர்கால பருவம் முடிந்தவுடன், உங்களுடைய கம்பளி ஆடைகளை நீங்கள் சேமித்து வைக்க நீங்கள் தயாராக இருக்கும்போது, முதல் படிநிலையானது அவைகளை சரியாகத் துவைத்து எடுத்து வைப்பதே ஆகும். உங்களுடைய சலவை இயந்திரத்தில் லேசான சலவைத்தூள் மற்றும் ஃபேப்ரிக் சாப்ட்னரை ஒரே அளவில் சேர்க்கவும். அதில் உங்கள் கம்பளி ஆடைகளை வைத்து உங்கள் வழக்கமான சுழற்சியில் இயக்கவும். இயக்கத்திற்கான பராமரிப்பு குறிப்புகளை எப்போதும் படிக்க மறக்க வேண்டாம்.
படிநிலை 2: வெயிலில் உலர வைக்கவும்
உங்களுடைய கம்பளி ஆடைகளைத் துவைத்தப் பின்னர், அவற்றை உலர வைக்க வேண்டும். உங்கள் சலவை இயந்திரத்தில் உலர்த்தக் கூடாது, ஏனென்றால் இது உங்களுடைய கம்பளி ஆடையானது சுருக்கம் அடையக் கூடும். வெயிலில் காயவைப்பதே சிறந்த தீர்வாகும், இது உங்களுடைய கம்பளி ஆடைகளில் இருக்கின்ற எந்த வித பாக்டீரியாவையும் அழிக்கும்.

படிநிலை 3: ஜிப்-லாக்குடன் கூடிய பையில் வைக்கவும்
உங்களுடைய கம்பளி ஆடைகளை எடுத்து வைக்க அதற்கு ஏற்ற அளவு ஜிப்-லாக் பையை எடுத்துக் கொள்ளவேண்டும். அவை முழுவதும் காய்ந்த பின்னர், மடித்து இந்த பையில் எடுத்து வைக்கவும்.
படிநிலை 4: கொஞ்சம் நறுமணம் சேர்க்கவும்
நீங்கள் கம்பளி ஆடைகளை எடுத்து வைத்துள்ள பையில் சில ரோஸ்மேரி அல்லது சிடார் இலைகளைச் சேர்க்கவும். உங்களுக்கு மிகவும் பிடித்தமான நறுமண எண்ணெய்யை உள்ளே தெளிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டை அல்லது இலவங்க குச்சிகளைப் பையில் போட்டு வைக்கலாம். உங்களுடைய கம்பளி ஆடைகளில் நல்ல நறுமணத்தை உண்டாக்க நீங்கள் விரும்பக்கூடிய நறுமணத்தைத் தேர்ந்தெடுங்கள்.
படிநிலை 5: பையை மூடிவைக்கவும்
கடைசியாக உங்களுடைய பையை காற்றுப் புகாதவாறு மூடி வைக்கவும், அதில் உங்களுடைய கம்பளி ஆடையானது கூடுதல் நறுமணத்துடன் இருக்கும். பையை மூடி வைப்பதற்கு முன்னர் அதிலிருக்கின்ற காற்றை வெளியேற்றப் பையைக் கீழே அழுத்தவும். இந்த பையை உங்களுடைய அலமாரியில் எடுத்து பத்திரமாக வைக்கவும், அடுத்த முறை நீங்கள் அதை உடுத்தும் போது, உங்கள் கம்பளி ஆடைகள் புதுவிதமான நறுமணத்துடன் மட்டுமின்றி, உங்களுக்கு பிடித்தமான நறுமணத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்!
உங்களுடைய கம்பளி ஆடைகளை நறுமணத்துடன் வைக்க இந்த சுலபமான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்!