உங்களது விளையாட்டிற்கான காலணிகளைச் சிறந்த வாசனையோடு வைத்திருப்பதற்கான அற்புத குறிப்புகள்!

உங்களது விளையாட்டிற்கான காலணிகளை புதிய வாசனையோடு வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? இந்த வியப்பூட்டும் குறிப்புகளைச் சிறிது முயற்சிக்கவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Amazing Tips to Keep Your Sports Shoes Smelling Great!
விளம்பரம்
Comfort core

நீங்கள் வெளிப்புற ஒட்டப்பந்தய வீரராக இருந்தால் வியர்வை, மழை மற்றும் சேறு ஆகியவற்றைக் காலணிகள் தாங்கிக்கொள்ளும். ஆனால், நீங்கள் அவைகளைச் சுத்தமாகவும், வாசனையுடனும் வைத்திருக்க உங்களுக்கு உதவும் வகையில் அற்புதமான குறிப்புகளை நாங்கள் வைத்துள்ளோம்!

இப்போது தொடங்கலாம்.

உங்களுடைய ஜிம் பைக்கும் கூட இந்த காட்டன் பந்து குறிப்பைப் பயன்படுத்தலாம்!

1) ஃபேப்ரிக் சாஃப்ட்னர்

இரு நடுத்தர அளவிலான காட்டன் பந்துகளில் 1 தேக்கரண்டி ஃபேப்ரிக் சாஃப்ட்னரை ஊற்றி, அதனைக் காலணிகளில் தனித்தனியாக வைக்கவும். உங்கள் காலணிகளை அணிவதற்கு முன், இரவு முழுவதும் அதை அப்படியே வைத்து விட்டு காலையில் அந்த பந்தை வெளியே எடுத்து விடவும். இது உங்கள் காலணிக்குச் சிறந்த வாசனையை கொடுக்கும்!

விளம்பரம்

Comfort core

2) நறுமண எண்ணெய்கள்

ஒரு கிண்ணத்தில், ½ கப் தண்ணீரை ஊற்றி, அதில் 6 முதல் 7 துளிகள் உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய்யை சேர்க்கவும், அல்லது பல்வேறு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்க்கலாம். புதினா மற்றும் தேநீர் மர நறுமண எண்ணெய்யின் கலவையையும் நீங்கள் பயன்படுத்தலாம்; இது நன்றாக வேலை செய்யும்! இந்த கரைசலைத் தெளிப்பான் பாட்டிலில் ஊற்றி, நன்றாகக் குலுக்கி உங்கள் காலணிகளுக்குள்ளே இதைத் தெளித்து விடவும். ஈரப்பதமாகும் என்ற பயத்தினால் நீங்கள் இதனை நேரடியாக உங்கள் காலணிகளில் தெளிக்க விரும்பவில்லை எனில், காட்டன் பந்துகளில் தெளித்து அதனை உங்கள் காலணிகளுக்குள் வைத்துக் கொள்ளலாம். உங்கள் காலணிகளை அணியும் முன் காலையில் அதனை வெளியே எடுத்து விடவும், அதன் பின் நீங்கள் நன்றாகச் செல்லலாம்!   

3) பிளாக் டீ

பிளாக் டீயையும் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிவீரா? இரண்டு டீ பைகளை 3 முதல் 4 நிமிடங்கள் வரை சூடான தண்ணீரில் நனைக்கவும். அதனை வெளியே எடுத்து, அவைகளைக் குளிர விடவும், இவற்றை தனித்தனியாக உங்கள் விளையாட்டிற்கான காலணிகளில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை வைக்கவும். அவைகளை நீங்கள் அகற்றிய பிறகு ஒரு சுத்தமான துணியை எடுத்து உங்கள் காலணிகளுக்குள்ளே இருக்கும் ஈரப்பதத்தை துடைக்கவும்.

இந்த குறிப்புகள் உங்கள் விளையாட்டிற்கான காலணிகளுக்குச் சுத்தத்தையும், வாசனையையும் அளிக்கும். இவைகளை இன்றே முயற்சிக்கவும்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது