கோடைக் காலம் வந்துவிட்டதால் , உங்கள் காட்டன் ஜாக்கெட்டை சிறந்த முறையில் பராமரிக்கவும், பாதுகாத்து வைக்கவும் சில எளிய வழிகள்.

தற்போது கோடைகாலம் என்பதால் உங்களுடைய காட்டன் ஜாக்கெட்டை சிறந்த முறையில் பராமரித்து, பாதுகாத்து வைக்க இதுவே சரியான நேரம். இதை செய்வதற்கு சில சரியான வழிமுறைகள் உண்டு. அவை என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Store Your Cotton Jacket Now that Summer’s Here
விளம்பரம்
Comfort core

குளிர்காலங்களில் காட்டன் ஜாக்கெட், ஒரு அருமையான வெளிப்புற ஆடையாகும். ஆனால் தற்போது குளிர்காலம் முடிந்துவிட்டதால், உங்கள் காட்டன் ஜாக்கெட்டை பாதுகாத்து எடுத்து வைக்க இதுவே சரியான தருணம். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த படிப்படியான செயல்முறை கொண்ட கையேடு உங்களுக்கு விளக்கும்.

இதோ தொடங்கலாமே!

படிநிலை 1: பாக்கெட்டுகளை காலி செய்யவும்

முதலில் உங்கள் ஜாக்கெட் பாக்கெட்களில் இருப்பதை காலி செய்யுங்கள். நீங்கள் எந்த பொருளையும் விட்டுவிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

படிநிலை 2: ஜாக்கெட்டை துவைக்கவும்

விளம்பரம்

Comfort core

உங்கள் ஜாக்கெட்டை குளிர்ந்த நீரும் லேசான சோப்பு தூளும் பயன்படுத்தி மிகவும் மென்மையாக உங்கள் கைகளால் துவைக்கவும். இதற்காக நீங்கள் சர்ஃப்  எக்ஸெல் ஈஸி வாஷ் பயன்படுத்தவும். சூடான நீரை அறவே தவிர்க்கவும், ஏனென்றால் அது உங்கள் காட்டன் ஜாகெட்டை பாதிப்பதோடு சுருங்கிப்போகவும் செய்துவிடும்.

படிநிலை 3: ஹேங்கர்களை பயன்படுத்தவும்

உங்கள் காட்டன் ஜாக்கெட் முழுமையாக உலர்ந்ததும், உங்கள் ஜாக்கெட்டின் பொத்தான்கள் அல்லது ஜிப்பை பூட்டி, ஜாக்கெட்டை சரியான முறையில் ஹேங்கரில் தொங்க விடவும். துணியில் எந்தவித ஈரப்பதமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

படிநிலை 4: நறுமணத்தை சேர்க்கவும்

உங்கள் ஜாக்கெட்டை எடுத்து வைக்கும் பொழுது நறுமணத்துடன் இருக்க செய்வதற்கு, கொஞ்சம் கிராம்பு, இலவங்க பட்டை, பெருஞ்சீரக விதைகள், கற்பூர துண்டுகள், ரோஜா இதழ்கள் மற்றும் வெண்ணிலா பீன்ஸ் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். இவையனைத்தையும் ஒரு காட்டன் துணியில் இறுக்கமாக கட்டி முடிச்சுப் போடவும். இதை உங்கள் அலமாரியில் ஒரு மூலையில், உங்கள் ஜாக்கெட் இருக்கும் இடத்தின் அருகே வைக்கவும். இது உங்கள் ஜாக்கெட்டை வருடம் முழுவதும் நறுமணத்துடன் வைத்திருக்கும்.

இந்த உதவிக்குறிப்புகள், உங்கள் காட்டன் ஜாக்கெட்டை பாதுகாப்பாகவும் அடுத்த குளிர்காலத்திற்கு தயாராகவும் வைத்திருக்கும்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது