
இத்தகைய எதிர்பாராத விபத்துகள் எங்கு வேணாலும் நடக்கலாம். அதுபற்றி கவலைப்படாமல், இங்கே கூறப்பட்டுள்ள குறிப்புகளை நினைவில் வைத்து, கறையை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
ஆடை மீது கிரேவி கொட்டினால் பேப்பர் டவல் பயன்படுத்தி அகற்றுங்கள்; அதை கையால் தட்டவோ, துடைக்கவோ வேண்டாம்.
ஸ்டெப் 1
ஆடையில் உ ள்ள கறை மீது கைவிரல்களால் கிளிசரின் தேய்த்து, ஒருசில நிமிடங்கள் காத்திருங்கள்.
ஸ்டெப் 2
அதனை குளிர்ந்த நீரில் நன்கு அலசிய பின், கறை நீக்கியை பயன்படுத்துங்கள். இதன்மூலமாக, உங்கள் ஆடையின் ஃபேப்ரிக் நிறம் மங்காமல் பாதுகாக்கப்படும்.

ஸ்டெப் 3
இதன்பின்னர், ஒரு பங்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 9 பங்கு குளிர்ந்த நீர் கலந்த கலவையில், ஆடையை 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
ஸ்டெப் 4
வெந்நீரில், ஆடையை துவைத்து, அலசி பின்னர் பிளீச் செய்யுங்கள். அது ஃபேப்ரிக்கை பாதுகாக்கும். மீண்டும் ஒருமுறை குளிர்ந்த நீரில் அலசி, துவைத்திடுங்கள்.
இப்படிச் செய்தால், உங்கள் ஆடையில் எதிர்பாராமல் ஏற்பட்ட கறையை எளிதாக நீக்கிவிடலாம்.