உங்களுக்கு பட்டு சேலை என்றால் மிகவும் விருப்பமா? இந்த முக்கியமான குறிப்புகளை பின்பற்றி அவற்றின் வாழ்நாளை அதிகக்கச் செய்யுங்கள்.
உங்கள் அலமாயில் பட்டு சேலைகளுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. அலமாயில் மட்டுமல்ல, உங்கள் இதயத்திலும்தான், இந்த குறிப்புகள் பட்டு சேலைகளை நீடித்து உழைக்கச் செய்கின்றன.
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது


பட்டு சேலை தரும் கவர்ச்சியும் அழகும் ஈடுஇணையற்றது. அது உடலைச் சுற்றி மடிப்பு மடிப்பாக இருக்கும் பாங்கு, அது தரும் உணர்வு அற்புதமானது. இது காரணமாகவே உங்களிடம் மற்றும் ஒவ்வொரு இந்திய பெண்ணின் இதயத்திலும் தனி இடத்தை பிடித்திருக்கிறது.
உங்கள் பட்டு சேலைகளின் நேர்த்தியை நீங்கள் பராமக்க வேண்டும் என்று விரும்பினால், இதோ சில எளிமையான குறிப்புகள். நச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்!
1) கைகளால் துவைக்கவும்
முதல் ன்று தடவை துவைப்பதற்கு குளிர்ந்த நீர் உபயோகிப்பது சிறந்தது. குளிர்ந்த தண்ணீல் சேலைகளை கைகளால் துவைக்கவும், தேவைப்பட்டால் மிதமான லிக்விட் சோப்பை உபயோகிக்கவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான டிடெர்ஜென்ட்களை உபயோகிக்க ஆரம்பிக்கலாம். மேலும், உங்கள் சேலைகளை வாஷிங் மெஷினில் துவைப்பதை தவிர்க்கவும். அதனால் இழைகள் பாதிப்படையச் செய்யலாம் மற்றும் பளபளப்பும் குறைந்துவிடலாம். ஒருபோதும் டம்பிள் ட்ரை செய்யக்கூடாது, இது உங்களுடைய பட்டு சேலையில் நரந்தரமான சுருக்கங்கள் விழச் செய்திடலாம்.
2) வெயிலில் குறைவான நேரத்திற்கு போடவும்
விளம்பரம்

வாடையையும் ஈரத்தன்மையையும் போக்கிட, சேலைகளை 3-4 நமிடங்கள் வெயிலில் போட்டு வைக்கவும். நீண்ட நேரம் விட்டு வைக்க வேண்டாம், நேரடியான வெயில் பட்டின் தன்மையை பாதிக்கச் செய்யலாம்.
3) மடிப்புகளை மாற்றவும்
உங்களுடைய பட்டு சேலைகளை நீண்ட நாள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், அதை வித்து மறுபடி மடித்து வைக்கப்பட வேண்டும். நரந்தரமான மடிப்பு வயை தவிர்த்திட மடிப்புகளை மாற்ற வேண்டியது அவசியம்.
பட்டு சேலையை தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் அதிக நேரம் செலவு செய்கிறீர்கள். சயான அமைப்பு, நெசவு, டிசைன் மற்றும் நறபேதங்கள் இப்படி ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்துகிறீர்கள். இருப்பினும், இந்த பிரத்தியேக சேலைகளை பராமக்க சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள தவறிவிட்டால் உங்களுடைய முயற்சிகள் யாவும் விழலுக்கு பாய்ச்சிய நீராய் ஆகிவிடும்.
இது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல. இந்த குறிப்புகளை பின்பற்றிப் பாருங்கள், உங்கள் பட்டு சேலைகளின் பளபளப்பு எப்போதும் பிரகாசிக்கச் செய்திடலாம்.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது