
உங்கள் பச்சிளம் குழந்தைக்கு தொற்றுப் பாதிப்புக்கள் மற்றும் சரும தடிப்புகள் எளிதில் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அந்த குழந்தையின் ஆடைகள் சுத்தமாக மற்றும் கிருமிகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்பது முக்கியம். அதுமட்டுமல்ல நீங்கள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்ப மாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும்!
இ தற்காக கவலைப்படாதீர்கள். உங்கள் குழந்தையின் ஆடைகளை வாஷ் செய்யும்போது ஒரு சில வீட்டுஉபயோக பகுதிப் பொருட்களை நீங்கள் சேர்ப்பதன் மூலம் அந்த ஆடைகள் மென்மையாக, ஃபிரெஷ் ஆக, கிருமிகள் இன்றி இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் இந்த பகுதிப் பொருட்கள் உங்கள் பச்சிளம் குழந்தையின் சருமத்திற்கு பாதுகாப்பானவை.
1. வினிகர் பயன்படுத்துங்கள்
ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 கப் வினிகர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். வினிகர் தண்ணீரில் நன்கு கரையும் வரை கலந்து கொள்ள வேண்டும். இப்போது இந்தக் கரைசலில் உங்கள் குழந்தையின் ஆடைகளை ஊற வையுங்கள். வினிகர் கறைகளை சிதைத்து போக்கி உங்கள் குழந்தையின் ஆடைகளை மென்மையாக்குவதோடு துர்நாற்றம் மற்றும் கிருமிகளையும் விரட்டி விடும். எனவே எந்த விதத்தில் பார்த்தாலும் இது சிறப்பானதே!
2. எ ஸென்ஷியல் ஆயில்கள் பயன்படுத்துங்கள்
உங்கள் குழந்தையின் ஆடைகளுக்கு இதமான நறுமணம் அளிக்க இயற்கையான மாற்றுப் பொருட்கள் எஸென்ஷியல் ஆயில்கள்தான். உங்கள் குழந்தையின் ஆடைகளை வாஷ் செய்யும்போது அந்த துணிகளில் 2-3 துளிகள் லாவெண்டர் ஆயில் சேர்த்து உங்கள் வழக்கமான சலவை முறையைத் தொடருங்கள்.

3. பேபி சோப் பயன்படுத்துங்கள்
நீங்கள் வாஷ் செய்யும்போது பேபி சோப்பை சில துண்டுகளாக்கி அந்த துண்டுகளை அதில் போடுங்கள். அது கிருமிகளை கொல்ல உதவும். உங்கள் குழந்தையின் ஆடைகளை சுத்தமாக வைத்திருங்கள். சுலபமாக செய்யும் இந்த செயல்கள் உங்கள் குழந்தையை புன்னகைக்க வைக்கும்.
எங்களின் சுலபமான குறிப்புகள்படி செய்வதன் மூலம் உங்கள் குழந்தையின் ஆடைகளில் தொற்றுக் கிருமிகளை போக்கி விடலாம் மற்றும் அவர்களின் நாசூக்கான சருமத்துக்கு எப்போதுமே பாதுகாப்பும் கிடைக்கும்.