உங்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஆடைகளை வீட்டில் அயர்ன் செய்வது பற்றிய ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி.

ஒரு வைபவத்திற்கு ஒரு நாளுக்கு முன்பு உங்களின் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஆடையை அயர்ன் செய்ய விருப்பமா? இதோ இந்த வழிகாட்டியை மேலே படியுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

A Step-By-Step Guide to Iron Your Embroidered Outfits at Home
விளம்பரம்
Comfort core

எம்ப்ராய்டரி செய்யப்படும் பெரும்பாலான ஆடைகள் சாடின், லேஸ், ஷிஃபான் மற்றும் இது போன்ற சில மிருதுவான பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. இந்த வகையான ஆடைகள் வழக்கமான அயர்னிங் செய்வதற்கு தகுந்தவை அல்ல. இவற்றுக்கு ஒரு ஸ்மார்ட்டான அயர்னிங் டெக்னிக் தேவை. அது என்ன என்று அறிய விருப்பமா? கவலைப்படாதீர்கள். அது அந்த அளவு ஒன்றும் கடினமான விஷயம் அல்ல.

நீங்கள் இதை மிக எளிமையாக செய்யுமாறு உதவ நாங்கள் உங்களுக்கு ஒரு படிப் படியான முறையை வழங்குகிறோம்.

செயல் 1:

இதற்கான முதல் செயல் ஸ்டீம் செய்தல். உங்கள் குளியல் அறையில் நீங்கள் ஒரு ஹாட் ஷவர் எடுக்கும்போது உங்கள் ஆடையை ஒரு மர ஹாங்கரில்  தொங்க விடுங்கள். ஷவரில் இருந்து வெளிவரும் ஸ்டீம் ஆடையில் உள்ள பல சுருக்கங்களை அகற்றி விட உதவும்.

செயல் 2:

விளம்பரம்

Comfort core

அடுத்து உலர வையுங்கள். அந்த ஆடை 4-5 மணி நேரம் உலர்ந்த பின்பு உங்கள் குளியல் அறையில் இருந்து அதை எடுத்து விடுங்கள்.

செயல் 3:

உங்கள் ஆடையை உட்புறமாக திருப்பி உங்களின் அயர்னிங் போர்டில் வையுங்கள். இது நேரடியான அயர்னிங்கில் உங்கள் ஆடையின் நூல் இழைகளை பாதுகாக்கும். இப்போது அதன் மீது ஒரு சுத்தமான துணியை விரித்து நேரடி வெப்பத்திற்கு எதிராக ஒரு கூடுதலான பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துங்கள். குறைவான டெம்பரேச்சர் செட்டிங் செய்து பயன்படுத்தி உங்கள் டிரெஸ் மீது அழுத்துங்கள். அதிக டெம்பரேச்சர் செட்டிங் பயன்படுத்தி உங்கள் சில்க் மற்றும் சாடின்  ஆடைகளை அயர்ன் செய்யக்கூடாது.  அவ்வாறு செய்தால் அவை மிக சுலபமாக பொசுங்கி விடும் என்பதை நினைவில் வையுங்கள்.

செயல் 4:

இப்போது ஆடையை லூசாக மடித்து சுத்தமான காற்றோட்டமான பகுதியில் வையுங்கள்.

நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்த ஆடையை அணியும்போது சிறப்பான பல நினைவில் இருக்கும் தருணங்கைளை உருவாக்கலாம். எனவே ஆடைக்கு எந்தப் பிரச்சினைகளும் ஏற்பட விடாதீர்கள். உங்களின் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஆடை கிரிஸ்ப்பாக மற்றும் ஒரு அழகான தீபம் போல் ஜொலிக்க எங்களின் விரைவான மற்றும் விவேகமான வழிகாட்டியைப் பயன்படுத்துங்கள்.

முக்கிய செயல்

ஸ்டீமிங் செய்யும் முன்பு, ஆடைகளில் கறைகள் ஏதும் இருந்தால் அவற்றை போக்கி விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி மிதமான டிடர்ஜெண்டை அதில் சேருங்கள். கறை பட்ட இடத்தில் இந்தக் கரைசலை மிதமாக தடவி உங்கள் விரல்களால் தடவி கறைகளை நீக்கி சுத்தம் செய்து விடுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது