தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு உங்களுக்கு பிடித்த உடைகளை எவ்வாறு தயாராக்குவது!

2019ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று உங்களுக்கு பிடித்த டிசைனர் உடைகளை காட்ட விரும்புகிறீர்கள். நாங்கள் தீபாவளி உடைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Get Your Favourite Outfits Ready for Diwali Festival Celebrations!
விளம்பரம்
Comfort core

நீங்கள் பல விருந்துகள், டான்ஸ்கள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குச் செல்ல விரும்புவீர்கள். அதற்காக உங்களுக்கு பிடித்த பாரம்பரிய உடைகளை அணிவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டியது அவசியம். இருந்தாலும் அந்த பராமரிப்பு சுலபமானதாக இருக்க வேண்டும். 

1) துவைக்கக்கூடிய பட்டு

பட்டுத் துணியால் ஆன உடைகளைத் துவைக்க 1  கப் மென்மையான டிடெர்ஜென்ட்டை ஒரு வாளியிலுள்ள வெதுவெதுப்பான தண்ணீரில் விடுங்கள். இதில் அந்த உடைகளை 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் அலசுங்கள்.  அதை பிழியக்கூடாது. அதற்கு பதிலாக அதன் மீது ஒரு டவலை வைத்து அழுத்தி அதிகப்படியான தண்ணீரை நீக்குங்கள்.  பிறகு ஒரு மர ஹேங்கரில் போட்டு நிழலில் உலர்த்துங்கள். அருமையான பட்டு உடைகளை அணிந்து உங்கள் தோற்றத்தை காட்டி அசத்துங்கள்.

2) காட்டனிற்கு

உங்கள் காட்டன் உடைகளை வெந்நீரில் துவைப்பதால் அது சோமாகலாம் அல்லது நிறம் மங்கலாம். அதற்கு  பதிலாக 2 கப் மென்மையான டிடெர்ஜென்ட்டை ஒரு வாளி தண்ணீரில் விட்டு கலக்கி அந்த கரைசலில் துணிகளை 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.  பிறகு மெதுவாக தண்ணீரை பிழிந்து விடுங்கள். அதன் பிறகு வாஷிங் மெஷினில் அலசும் சுழற்சியின் போது ஒரு கப் வினிகர் விட்டு அதில் அந்த துணியை துவைக்கவும். இதன் மூலம் கலர் மங்குவது தடுக்கப்பட்டு, காட்டன் துணிகளின் பிரகாசம் தக்க வைக்கப்படும். அதோடு உங்கள் துணிகள் மிருதுவாகவும் புத்துணர்வு நறுமணத்துடனும் இருக்கும். 

விளம்பரம்

Comfort core

3) ஷிஃபான் துணிகளுக்கு

கையால் துவைக்கும்போது, ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் 1 கப் மென்மையான டிடெர்ஜென்ட் விட்டு கரைத்துக் கொள்ளவும். உங்கள் ஷிஃபான் உடைகளை  இதில் போட்டு ஒரு சுழற்று சுழற்றவும். பிறகு 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். சோப்புத் தண்ணீர் போகும் வரை குளிர்ந்த தண்ணீரில் அலசவும். துணியை முறுக்கிப் பிழியக்கூடாது. இரண்டு உலர்ந்த டவல்களுக்கு இடையில் துணியை வைத்து மெதுவாக அழுத்தி அதிகப்படியான தண்ணீரை நீக்கவும். 

4) ப்ரோகேட் துணிகளுக்கு

ப்ரோகேட் துணிகளில் உயர்த்தப்பட்ட டிசைன்கள் இருக்கும் என்பதால் இவ்வகையான உடைகளை கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும்.   இவற்றை துவைத்து பத்திரப்படுத்தி வைப்பதற்கான கேர் லேபிளை படிக்கவும்.  கையால் துவைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தால், 1/2 கப் மென்மையான டிடெர்ஜென்ட்டை அரை வாளி குளிர்ந்த தண்ணீரில் விட்டு கரைக்கவும். அந்த சோப்புக் கரைசலில் துணிகளை 5 நிமிடங்கள் ஊற வைத்து அலசவும். துணியை தேய்க்கவோ முறுக்கிப் பிழியவோ கூடாது. இதனால் ப்ரோகேட் சேதமாகிவிடலாம் . துணியை உலர வைப்பதற்கு இரண்டு காட்டன் டவல்களுக்கு இடையே அதை வைத்து அழுத்தி அதிகப்படியான தண்ணீரை நீக்கவும்.  உங்கள் உடைகளை தட்டையான மேற்புறத்தில் வைத்து இயற்கையாக உலர விடவும். 

5) பாலியஸ்டர் துணிகளுக்கு

இவ்வகை துணிகளைத் துவைக்கும் முன்பு துவைப்பதற்கான வழிமுறைகளை கேர் லேபிளில் பார்க்கவும். ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 கப் மென்மையான டிடெர்ஜென்ட்டை கரைத்து, அதில் பாலியஸ்டர் உடைகளை ஊற வைக்கவும். பிறகு அவற்றை அலசி இயற்கையாக உலர வைக்கவும். அவற்றை வாஷரில் உலர்த்தாதீர்கள். 

உங்கள் தீபாவளி உடைகள் எந்த வகையாக இருந்தாலும், அவற்றைப் பராமரிக்க இந்த வழிமுறைகளைக் கையாளவும். 

உங்கள் உடைகளை உலர்த்த மர ஹேங்கர்களைப் பயன்படுத்தவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது