
லெதர் ஜாக்கெட்டுகள் விலை அதிகமானவை, இவை உங்களிடம் இருக்கும் உடைகளில் சிறப்பானவை. அவற்றை சரியாக வைத்திருந்தால் லெதர் ஜாக்கெட்டுகள் உங்களை மிகவும் ஃபேஷனபிளாக காட்டும். இந்த குறிப்புகளை படித்து, பின்பற்றி உங்கள் லெதர் ஜாக்கெட்டுகளின் ஆயுளை அதிகரிக்கவும்.
1) அகலமான ஹேங்கர்ஸ் பயன்படுத்தவும்.
லெதர்களுக்கு காற்றோட்டம் தேவை. மடித்து வைப்பதால் ஜாக்கெட்டுகளில் மடிப்பு ஏற்படும். அவற்றை சுலபமாக நீக்க முடியாது. எனவே உங்கள் லெதர் ஜாக்கெட்டுகளை அலமாரியின் அகலமான மர ஹேங்கர்களில் போட்டு தொங்க விடவும். தோள் பகுதிக்கு சரியாக தொங்கவிடப்பட வேண்டும். அது தொய்ந்து போய்விடக்கூடாது.
2) செய்தித்தாள் பந்துகளை பயன்படுத்தவும்.
உங்கள் லெதர் ஜாக்கெட்டுகளுக்குள் செய்தித்தாள் பந்துகளை அடைத்து வைக்கவும். இதனால் அதிகப்படியான ஈரம் உறிஞ்சப்படும். மற்றும் பூஞ்சணான்கள் வளர்வது தடுக்கப்படும். நீங்கள் காற்றிலுள்ள ஈரப்பதம் ஜாக்கெட்டுகளின் மீது படியாமல் இருக்க அவற்றின் மீது சில செய்தித்தாள்களையும் க்ளிப் செய்து வைக்கலாம்.

3) கன்டெயினர்களை பயன்படுத்தவும்.
லெதரை துணிப் பைகளில் அல்லது மரப்பெட்டிகளில் அல்லது சூட்கேஸ்களில் வைக்கலாம். ஆனால் அவற்றை பிளாஸ்டிக் கன்டெயினர்களில் வைக்கக்கூடாது. லெதருக்கு காற்றோட்டம் தேவை. பிளாஸ்டிக் பெட்டிகளில் காற்றோட்டம் இருக ்காது. மேலும் ஒரு லெதர் உடைக்கும் அதிகமாக இருந்தால் அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைக்கக்கூடாது. அவற்றிற்கு இடையில் செய்தித்தாள்களை வைக்கவும். இதன் மூலம் அவற்றின் ஆயுளை அதிகரிக்க முடியும்.
4) கண்டிஷனர் பயன்படுத்தவும்.
உங்கள் லெதர் ஜாக்கெட்டின் பளபளப்பையும், ஸ்மூத்தான ஃபினிஷையும் பராமரிக்க, நல்ல தரமான லெதர் கண்டிஷனரை பயன்படுத்தவும். உங்கள் ஜாக்கெட்டின் மீது மிருதுவான துணியால் கண்டிஷனரை மெல்லிய படலமாக பூசவும் மற்றும் அது இயற்கையாக உலரட்டும். இதன் மூலம் உங்கள் ஜாக்கெட்டின் பளபளப்பான தோற்றத்தை நீண்ட காலம் பராமரிக்கலாம்.
5) கட்டுப்பாடான வெப்ப நிலை
வெப்ப நிலை மற்றும் ஈரப்பத ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் இடங்களில் லெதர் உடைகள் ஒழுங்காக இருக்காது. அவற்றை காற்றிலுள்ள ஈரப்பதம் மற்றும் நேரடி சூரிய ஒளி குறைவாக இருக்கும் இடங்களில் வைத்திருக்கவும்.
6) உங்கள் ஜாக்கெட்டை காற்றோட்டமாக வைக்கவும்
உங்கள் லெதர் ஜாக்கெட்கள் காற்றோட்டமாக இருக்க வேண்டும். எனவே அவற்றை அவ்வப்போது வெளியில் எடுத்து மற்றும் உங்கள் ஜாக்கெட்டை 5–10 நிமிடங்கள் காற்றோட்டமாக வைக்கவும். இதன் மூலம் அவற்றில் காற்று படும்.
உடை அணிந்து அசத்த வேண்டுமா? உங்கள் லெதர் ஜாக்கெட்டை சுத்தம் செய்து அணியவும்.