இந்த குறிப்புகள் மூலம் உங்கள் காஞ்சிபுரம் புடவைகளுக்கு கிடைக்கும் மேம்படுத்தப்பட்ட அழகு
உங்கள் அலமாரியில் அழகிய காஞ்சிபுரம் புடவைகள் நிறைந்துள்ளனவா? இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் காஞ்சிபுரம் புடவைகளின் அழகை மேலும் மேம்படுத்தி, அவற்றின் புதிய கதைகளை சொல்ல வைத்திடுங்கள்.
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது


காஞ்சிபுரம் புடவைகள் இந்திய விழாக்களுக்கு தனியான ஒரு அழகைக் கொடுக்கும். இருந்தாலும் அசத்தும் காஞ்சிபுரம் புடவைகளை விசேஷமாகப் பராமரிக்கவும் வேண்டும். ஏனென்றால் உங்கள் காஞ்சிபுரம் புடவைகளை நன்கு பராமரிக்காவிட்டால் அவற்றின் அழகிற்கு எவ்வாறு அழகு சேர்ப்பீர்கள்?
உங்கள் அபிமான காஞ்சிபுரம் புடவையை சூட்கேஸிலிருந்து வெளியில் எடுக்கும்போது அது களையில்லாமல் இருப்பதைப் பார்த்தால் மனசு வேதனைப்படும்.
கவலை வேண்டாம். அவ்வாறு நடக்காமல் தடுக்க முடியும். இந்த வழிகாட்டியை கைவசம் வைத்திருந்து உங்கள் காஞ்சிபுரம் புடவையை நீண்ட காலம் நல்ல தோற்றத்துடன் வைத்திருக்கலாம்.
உங்கள் காஞ்சிபுரம் புடவையை இதர வகை புடவைகளுடன் சேர்த்து வைக்காதீர்கள்.
1) மென்மையான டிடெர்ஜென்ட்டையும், வெதுவெதுப்பான தண்ணீரையும் பயன்படுத்தவும்
விளம்பரம்

ஒரு கப் மென்மையான டிடெர்ஜென்ட்டை ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் கரைக்கவும். புடவையை அந்த கரைசலில் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். புடவையை எடுத்து அதை குளிர்ந்த தண்ணீரில் அழுக்கும் சோப்பும் போகும் வரை அலசவும்.
2) அதை ஒரு துண்டில் போடுங்கள்
நீங்கள் காஞ்சிபுரம் புடவையை கையால் துவைத்தால் அதை முறுக்கிப் பிழியாதீர்கள். அதை ஒரு டவலில் சுற்றி மெதுவாக அழுத்தி தண்ணீரை வெளியேற்றுங்கள். ஒரு மர ஹேங்கரில் அதை நிழலில் உலர வையுங்கள்.
3) மடிப்புகளை மாற்றுங்கள்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி மடித்து வையுங்கள். இதன் மூலம் நிரந்தரமாக மடிப்பு விழாமல் இருக்கும். மேலும் வீட்டில் காற்றாட விட்டு புடவையின் மீது நேரடியாக வெயில் படாமல் சுமார் 15-20 நிமிடங்களுக்கு இருந்தால் அதன் ஆயுள் நீடிக்கும்.
இந்த சுலபமான குறிப்புகளை கையாண்டால் உங்கள் காஞ்சிபுரம் புடவை பல ஆண்டுகள் அழகாக இருக்கும்.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது