
ஒரு சரியான சூட் பிரத்தியேக சந்தர்ப்பங்களின் போது உங்களை பெருமையுடன் பகட்டாக தோன்றச் செய்கிறது. ஆகவே உங்கள் சூட்டை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. நீங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால் போதும், உங்கள் சூட் எப்போதும் பிராண்ட் நியூ போன்றே தோற்றமளிக்கும்.
உங்களுடைய சூட் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றால், அதனுடைய தரம், பொலிவு ந லிந்து போய்விடும். உங்களுடைய சூட் விலையுயர்ந்தது என்பதால் அன்றாட அடிப்படையில் அணிந்து கொள்வதில்லை. சரியான நடவடிக்கைகளை உபயோகித்து அதை நல்ல முறையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களுக்கு உதவிட இதோ சில பயனுள்ள குறிப்புகள்.
1) பிரஷ் கொண்டு தேய்க்கவும்
உங்களுடைய அலமாரியில் உங்களுடைய சூட்டை தொங்கவிடுவதற்கு முன்பு, இஸ்திரி பலகை மீது பரப்பி ஒரு ஃபேப்ரிக் பிரஷ் உபயோகித்து மெதுவாக பிரஷ் செய்யவும். இது தூசு மற்றும் பிசிர்களை நீங்குகிறது.

2) வெயில் கூடாது
வெயில் உங்கள் சூட்-ன் கலருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது. உங்களுடைய சூட் நேரடி வெயிலுக்கு உள்ளானால் நிறமாற்றத்தை உண்டாக்கலாம். ஆகவே அதை ஒரு குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில், நேரடி சூரிய ஒளிக்கு அப்பால் தொங்கவிடவும்.
3) ஒரு வுட்டன் ஹாங்கரை உபயோகிக்கவும்
உங்களுடைய சூட்-ன் ஒரிஜினல் வடிவணிம் அமைப்பும் சீர்குலை யாதிருக்க உருண்டை முனையுடைய வலுவான ஒரு வுட்டன் ஹாங்கரை உபயோகித்து தொங்க விடவும்.
4) தூசு படியாமல் பார்த்துக் கொள்ளவும்
Cஅதை ஒரு துணி பை கொண்டு உறையிட்டிடவும், அவ்வாறு செய்யும்போது தூசு மற்றும் பூஞ்சை படியாது பாதுகாக்கப்படுகிறது.
5) காற்றோட்டம்
உங்களிடம் சூட்கள் அதிகமாக இருந்தால் சரியான காற்றோட்டத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அவற்றை தொங்கவிடும்போது ஒன்றுடன் மற்றொன்று ஒட்டிக்கொண்டிருக்காமல் போதிய இடைவெளி விட்டு தொங்கவிடவும். இதனால் சரியான காற்றோட்டம் உறுதி செய்யப்படுகிறது.
6) பிரயாணம் மேற்கொள்ளும்போது போர்ட்டபிள் கார்மென்ட் பேக் உபயோகிகவும்
நீங்கள் பயணம் செல்லும்போது, உங்களுடைய சூட்-ஐ எடுத்துச் செல்வதற்கு போர்ட்டபிள் கார்மென்ட் பேக் உபயோகிகவும் மற்றும் அதை சரியான முறையில் உங்கள் சூட்கேஸில் வைக்க வேண்டும்.
சூட் உங்களை சுறுசுறுப்பாக புன்னகையுடன் இருக்கச் செய்யும்!