உங்களுக்கு பிடித்த பருத்தி குர்திக்கு நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை எப்படி அறிவீர்கள்?

பருத்தி குர்திகள் நகர்ப்புற பெண்களின் அலமாரிகளில் பிரதானமான ஒரு உடையாகும். அவற்றை எவ்வாறு திறம்பட சுத்தம் செய்து பராமரிப்பது என்பதை இங்கே காணலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How Do You Let Your Favourite Cotton Kurti Know That You Really Care for It
விளம்பரம்
Comfort core

ஒரு பருத்தி குர்தி என்பது இந்தியாவில் கோடையில் உடுத்த வேண்டிய ஆடை. ஆனால் இது ஒரு நுட்பமான துணி என்பதால், பருத்திக்கு கூடுதல் கவனிப்பு மற்றும் கையாளுதல் தேவை. இந்த கட்டுரையில், உங்கள் பருத்தி குர்த்தியிலிருந்து  கறைகளை எப்படி சுத்தம் செய்வது என்பது மற்றும் பருத்தி ஆடையை பராமரிக்க சில அற்புதமான உதவிக் குறிப்புகளையும் இங்கே விளக்கியுள்ளோம்.

1) உப்பு நீரில் ஊற வைக்கவும்

உங்கள் பருத்தி குர்த்தியின் நிறத்தை நீங்கள் பாதுகாக்க விரும்பினால், எப்போதும் துவைப்பதற்கு முன் அதை ஊறவைக்கவும். 1 தேக்கரண்டி கல் உப்பை எடுத்து ஒரு வாளி குளிர்ந்த நீரில் கலக்கவும். அதில் ஒரு மணி நேரம் குர்த்தியை ஊறவைத்து, பின் கைகளால் துவைக்க வேண்டும்.

2) லேசான சோப்பை பயன்படுத்தவும்

பருத்தி ஆடை என்பது ஒரு நுட்பமான துணி, எனவே இதற்கு லேசான சோப்பே தேவை. நீங்கள் சர்ப் எக்செல் ஈஸி வாஷைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம்.

விளம்பரம்

Comfort core

3) குளிர்ந்த நீரில் துவைக்கவும்

உங்கள் பருத்தி குர்த்தியை குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். சூடான நீரை உபயோகிக்க வேண்டாம் , ஏனெனில் அதன் நிறம் மங்கிவிடுவதோடு துணியும் சுருங்கிவிடக்கூடும்.

4) சூரிய ஒளியை தவிர்க்கவும்

உங்கள் பருத்தி குர்த்தியை  நிழலில், காற்றில் உலர்த்தவே நாங்கள் பரிந்துரைக்கிறோம். துணியின் மேல் சூரிய ஒளி நேராக படுவதை தவிர்க்கவும். இஸ்திரி செய்யும் போது, ​​ஆடைக்கு மேலேயும் கீழேயும் ஒரு பாதுகாப்பு அடுக்கு வைக்கவும். நீங்கள் இதற்கு பருத்தி துண்டுகள் பயன்படுத்தலாம். வெப்பத்தை நேரடியாக துணியின் மேல் செலுத்துவதை தவிர்க்கவும், ஏனெனில் அது துணியை சேதப்படுத்தும்.

மேலும், உங்கள் பருத்தி குர்த்தி சுருக்கமில்லாமல் இருக்க, துவைத்த பின், அது முற்றிலுமாக உலர்ந்ததும் அதை மெதுவாக இழுத்து நீட்டவும். இவ்வாறு செய்வதனால் துணி, சுருக்கங்கள் இல்லாமல் இருப்பதோடு, இஸ்திரி செய்யவும் தேவையில்லை! 

மேலும் சலவை செய்யும் பராமரிப்பு வழிமுறைக்கு, துணியின் பராமரிப்பு லேபிளை பார்த்து அவற்றைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் பருத்தி குர்த்தியை நல்ல நிலையில் வைத்திருக்கும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது