உங்கள் பட்டு டைகளை பராமரிப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

பட்டு டை என்பது ஒரு ஆணை நேர்த்தியாக எடுத்துக் காட்டும், மேலும் அலுவல்சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மிக ஏற்ற அணிகலனாக இருக்கும். இந்த எளிய குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் ஆடம்பர டையை பராமரிக்கவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

All You Need to Know About Maintaining Your Silk Ties
விளம்பரம்
Comfort core

பட்டு என்பது நாசூக்கான துணி ஆகும் மற்றும் இதை நன்கு பராமரிக்க வேண்டியது அவசியம்.  பெண்கள் தமது பாரம்பரிய பட்டுப் புடவைகளை பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது போலவே, ஆண்களும் தமது அருமையான பட்டு டையை இளம் தலைமுறைக்கு கொடுக்கின்றனர்.  இவற்றை சரியாக பராமரிப்பதை உறுதிசய்வதற்கு பின் வரும் சில எளிமையான குறிப்புகளைப் பின்பற்றவும்

கறைகளை நீக்குவதற்கு

எப்போதும் ஒரு சுத்தமான துணியின் மூலம் கறைகளை ஒத்தி எடுக்கவும். எந்த ஒரு நிலையிலும் கறைபட்ட இடத்தை தேய்க்காதீர்கள், இதனால் கறை பரவிவிடும் மற்றும் அதை நீக்குவதும் கடினமாகிவிடும். எண்ணெய் அல்லது க்ரீஸ் கறை பட்டிருந்தால் அந்த இடத்தில் கொஞ்சம் டால்கம் பவுடரைப் போட்டு இரவு முழுவதும் வைத்திருக்கவும். இப்போது டால்கம் பவுடரை இதமாக பிரஷ் செய்து நீக்கி, துவைத்து உலர வைக்கவும்.  கறை துணியிலிருந்து தளர்த்தி நீக்கப்படும். அவ்வாறு போகவில்லை என்றால் இந்த முறையை மீண்டும் செய்யவும். 

துவைத்தல்

உங்கள் பட்டு டைகளை ட்ரைக்ளீன் செய்வதே சிறந்தது. எனினும், உங்கள் டையை ஹேண்ட் பிரஸ் செய்ய வேண்டும் என்று உங்கள் ட்ரை க்ளீனரிடம் கட்டாயம் சொல்ல வேண்டும்.  இதன் மூலம் ஒரங்களை அப்படியே கெடாமல் வைத்திருக்கலாம்.  உங்கள் டையை கையால் துவைக்க விரும்பினால், ஒரு மிதமான டிடெர்ஜென்ட்டை பயன்படுத்தி மற்றும் குளிர்ந்த தண்ணீரில் துவைக்கவும்.  வெந்நீர் அந்த துணியை பாழாக்கிவிடலாம். பட்டு டையை நேரடியாக வெயிலில் உலர்த்தாதீர்கள்.  ஏனென்றால் அது துணியை கெடுத்து நிறத்தை மங்கச் செய்யலாம்.. 

விளம்பரம்
Comfort core

சுருக்கங்களை நீக்குதல்.

ஹேண்ட் ஸ்ட்ரீமர் பயன்படுத்துவதுதான் உங்கள் பட்டு டைகளில் உள்ள சுருக்கங்களை நீக்க சிறந்த வழி.  அந்த சுருக்கங்கள் போய்விடும்.   இல்லை என்றால் நீங்கள் சுருக்கங்களை இஸ்திரி மூலம் நீக்கலாம். இதை செய்வதற்கு உங்கள் பட்டு டையின் மீது ஒரு டவலை வைத்து, டவல் மீது கொஞ்சம் தண்ணீர் தெளிக்கவும். பிறகு இஸ்திரி பெட்டியை மிகக் குறைவான வெப்பநிலையில் வைத்து அந்த டவல் மீது மென்மையக இஸ்திரி செய்யவும்.  கொஞ்சம் நேரம் காத்திருந்து பிறகு டையை வெளியில் எடுக்கவும். 

வைத்திருத்தல்.

எப்போதும் உங்கள் பட்டு டையை குளிர்ந்த, இருட்டான இடத்தில் வைக்கவும். அவற்றை பந்து போல சுருட்டி வைப்பதன் மூலம் மடிப்புகள் வராமல் தடுக்கலாம். அவற்றை நீக்குங்கள் அல்லது டை ரேக்கில் தொங்க விடுங்கள்

எங்களின் இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தினால் டையை முடிச்சுப்போடும் பிரச்சினை தீர்ந்துவிடும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது