
உங்கள் வீட்டில் கர்ட்டன்கள் ஒரு முக்கியமான அங்கம். நீங்கள் அவற்றை கவனமாக தேர்ந்தெடுத்தால் உங்கள் வீட்டின் அழகு மேலும் அதிகமாகிறது. எனினும், நேரடியாக தொடர்ந்து அவற்றின் மீது வெயில்படும் போது அவற்றின் பளிச்சென்ற தோற்றம் மங்கலாகும், அதனால் துணி சுருங்கவும் செய்யலாம்.
அமைதியாக இருங்கள், கவலைப்பட தேவையில்லை, இதை சரிசெய்ய நாங்கள் உங்களுக்கு வ ழிகாட்டுகிறோம். வெயிலால் ஏற்படும் சேதத்திற்கு எதிராக உங்கள் கர்ட்டன்களை பாதுகாக்க இந்த சுலபமான முறையை பயன்படுத்திப் பாருங்கள்.
செயல் 1 :
கவனமாக கர்ட்டன்களை கழற்றுங்கள், அதில் எந்த ஹார்டுவேரும் இணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்யுங்கள். இப்போது ஒரு சமதளப் பரப்பில் அவற்றை வையுங்கள்.
செயல் 2:
கர்ட்டன்களில் ஏதேனும் லூஸ் தூசுகள், அழுக்குகளை வாக்வம் க்ளீனரால் அகற்றுங்கள்.

செயல் 3:
கர்ட்டனில் தயாரிப்பாளரின் லேபிளில் மெஷின் வாஷ் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தால் உங்கள் கர்ட்டன்களை வாஷிங் மெஷினில் போட்டு இதமான கோல்டு சைக்கிளில் ரன் செய்யுங்கள். பின்பு நேரடியாக டிரம்மில் நீங்கள் விரும்பும் டிடர்ஜெண்ட் 3 மேஜைக் கரண்டி போட்டு சுழல விடுங்கள். ஆனால், லேபிளில் ஹாண்ட் வாஷ் செய்யும்படி குறிப்பிட்டிருந்தால் 1 வாளி தண்ணீரில் 2 மேஜைக்கரண்டி டிடர்ஜென்ட் போட்டு கைகளால் இதமாக வாஷ ் செய்யுங்கள். எப்போதுமே ஒரு நேரத்தில் ஒரு பேனலை மட்டும் வாஷ் செய்யுங்கள்
செயல் 4:
உங்கள் கர்ட்டன்களை இப்போது காற்றில் உலர விடுங்கள்.
உங்கள் கர்ட்டன்கள் சரியான நிலையில் இருக்க, மாதம் ஒரு முறை அவற்றை டிரையரில் போட வேண்டும். இதனால் தூசுகள் மற்றும் அழுக்குகள் அகல உதவும். நோ ஹீட் செட்டிங் பயன்படுத்தி 10 நிமிடங்களுக்கு அவற்றை உலர விடுங்கள்.
கர்ட்டன்கள் மங்கலாவதை தடுப்பது கடினமல்ல. நீங்கள் மேற்குறிப்பிட்ட வாஷிங் மற்றும் பராமரிப்பு முறைகளை பயன்படுத்தி அவற்றின் உழைப்புக் காலத்தை சுலபமாக அதிகரிக்கலாம்.
எனவே, உங்கள் வீடு தூசுகள் இல்லாத கர்ட்டன்களால் அழகாக ஜொலிக்கட்டும்.
முக்கிய செயல்
உங்கள் கர்ட்டன்கள் சரியான முறையில் இருக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை அவற்றை டிரை க்ளீனிங்குக்கு அனுப்புங்கள்.