உங்கள் அம்மா உங்களுக்கு அன்புடன் ஆசையோடு வழங்கிய அழகான சேலைகளை அதிக கஷ்டமின்றி பாதுகாத்திடுங்கள்

உங்கள் அம்மா உங்களுக்கு ஆசையாக கொடுத்த பல சேலைகள் எப்போதுமே உங்கள் நினைவில் இருக்கும் ஒரு பொக்கிஷம். இந்த சுலபமான வழிகள் அந்த சேலைகளுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். எனவே, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் அதை நினைத்து உடுத்தி பெருமிதப்படுவீர்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

effortlessly preserve the beautiful sarees your mum presented to you
விளம்பரம்
Comfort core

உங்கள் அம்மா உங்களுக்கு ஆசையாக கொடுத்த சேலைகள் எப்போதுமே உங்கள் மனதுக்கு நெருக்கமான ஒரு உணர்வை உருவாக்கும். அந்த சேலைகளை பராமரிக்க சிறப்பான கவனம் செலுத்தி அவை நீண்ட காலம் இருக்க நீங்கள் கூடுதலாக முயற்சி செய்வீர்கள்.  இதோ  நாங்கள் அதற்கான வழி கூறுகிறோம்.

இந்த வழிகள், நீங்கள் நீண்ட காலத்திற்கு அந்த சேலைகளை பத்திரமாக பாதுகாத்து பராமரிக்க உதவும்.

2-3 மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் சேலைகளை சுமார் 10 நிமிடங்கள் வெயிலில் போடுங்கள். இதனால் சேலைகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து அவற்றின் பளிச்சென்ற தன்மையை பராமரிக்க உதவும். மீண்டும் சேலைகளை அறை வெப்ப நிலைக்கு உட்படுத்திய பின்பே அவற்றை உங்கள்  பீரோவில் அடுக்கி வைக்க வேண்டும்.

1) காட்டன் சேலைகள்

அயர்னிங்

விளம்பரம்

Comfort core

உங்கள் பருத்தி சேலைகளை லோ ஹீட் செட்டிங்கில் அயர்ன் செய்து ஒரு பிளாஸ்டிக் ஜிப்பர் பேக்கில் வைக்கலாம் அல்லது ஒரு சுத்தமான துப்பட்டாவில் அவற்றை சுற்றி அவை சுருக்கம் அடையாமல் தடுப்பதை உறுதி செய்ய ஒரு பெரிய தளர்வான முடிச்சு போட்டு வைக்க வேண்டும்.

பத்திரப்படுத்துதல்

உங்களின் அடர் நிற பருத்தி சேலைகளை இலேசான நிறம் உள்ளவற்றுடன் வைக்காதீர்கள். சில நேரங்களில் ஈரப்பதம் காரணமாக இதன் கலர் மற்றும் பிரிண்ட் பாதிக்கப்பட்டு விடலாம்.

ஸ்டார்ச்சிங்

எப்போதுமே  தகுந்த விதத்தில் உங்கள் சேலைகளை ஸ்டார்ச் செய்யுங்கள்.  கூடுதல் ஸ்டார்ச் உங்கள் சேலைகளின் நூல் இழைகளை மோசமாக பாதித்து விடலாம்.

வாஷ் செய்தல்

நீங்கள் உங்கள் பருத்தி சேலைகளை வீட்டிலேயே வாஷ் செய்தால் எப்போதுமே ஒரு மிதமான தன்மையுள்ள டிடர்ஜெண்டைப் பயன்படுத்துங்கள்.

2) பட்டுச் சேலைகள்

பத்திரப்படுத்துதல்

இதர ஃபேப்ரிக்குகளால் தயாரிக்கப்பட்டுள்ள சேலைகளுடன் உங்கள் பட்டுச் சேலைகளையும் சேர்த்து பத்திரப்படுத்தக் கூடாது. ஏனெனில் இது இரண்டு வகை சேலைகளுக்கும் சேதம் ஏற்படுத்தலாம். எப்போதுமே நேரடி வெயில் படாமல் இவற்றை பத்திரப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றை குளிர்ச்சியான, ஈரப்பதம் இல்லாத பகுதியில் பத்திரமாக வையுங்கள்.

பிளாஸ்டிக் கவர் கூடாது

எந்த ஒரு பிளாஸ்டிக் கவரையும் அகற்றுங்கள். இதனால் ஜரிகை வேலைப்பாடு அல்லது சேலை நிறம் மாறிவிடலாம். 

சுற்றி வைத்து பத்திரப்படுத்துதல்

எப்போதுமே பழைய துப்பட்டாக்கள் அல்லது சுத்தமான டவல்களில் கனமான சேலைகளை சுற்றி வையுங்கள்.

வாஷ் செய்தல்

இப்போது உங்கள் பட்டுச்சேலைகளை வீட்டில் வாஷ் செய்தால் அந்தப் பட்டுக்கு ஏற்றவிதத்தில் செயல்படும் மிதமான டிடர்ஜெண்டைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் அழகான சேலைகள் அருமையான மெட்டீரியல், நவீன டிசைன், மிகச்சிறந்த நிறம் மற்றும் வியப்பூட்டும் டெக்ஸர் கொண்டதாக இருப்பதால் அவற்றுக்கு சில சிறப்பு பராமரிப்புகள் அவசியம். இந்தக் குறிப்புகள் இந்த விலை மதிப்புள்ள சேலைகளை பாதுகாப்பதில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது