உங்கள் சூட்டை ஸ்மார்ட்டான வழியில் பத்திரப்படுத்த விவேகமான குறிப்புக்கள்!

ஒரு பெர்ஃபெக்ட் சூட்டானது சிறப்பு வைபவங்களில் உங்கள் தோற்றத்தை பளிச்சென்று காட்ட உங்கள் வார்ட்ரோப்பில் இருக்கும் ஒரு சிறு ஆடை. உங்கள் சூட்டை எவ்வாறு ஸ்மார்ட்டாக சரியான முறையில் பராமரிப்பது என நாங்கள் வழிகாட்டுகிறோம்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

clever tips to store your suit the smart way
விளம்பரம்
Comfort core

நீங்கள் சரியான சூட் அணிந்து செல்வதால் சிறப்பான வைபவங்களில் உங்கள் தோற்றம் பளிச்சென கண்கவரும்.எனவே உங்கள் சூட்டிற்கு சரியான பராமரிப்பு மிக மிக முக்கியம். ஒரு சிறிதளவு முயற்சி மூலம் நீங்கள் நீண்ட காலம் உங்கள் சூட் புத்தம் புதிதாக தோன்றுமாறு செய்யலாம்.

ஒழுங்கற்ற விதத்தில் உங்கள் சூட்டை பத்திரப்படுத்தி வைப்பது  சூட்டின் தரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். ஒரு சூட்டின் விலை அதிகம் என்பதாலும், அதை தினந்தோறும் பொதுவாக அணிந்து கொள்வதில்லை என்பதாலும் சரியான முறைப்படி பயன்படுத்தி அதை பாதுகாப்பது முக்கியம்.

இதோ உங்களுக்கு உதவும் விதத்தில் பயனுள்ள ஒரு சில குறிப்புக்கள்.

எந்தவிதமான மிதமான டிடர்ஜென்டையும் பயன்படுத்தும் முன்பு, அது சூட்டிற்கு ஒத்துப் போகுமா என்று அறிய சூட்டில் ஒரு சிறிய மறைவான பகுதியில் அதை முதலில் பயன்படுத்திப் பாருங்கள்.

1) பிரஷ் செய்யுங்கள்

விளம்பரம்

Comfort core

உங்கள் சூட்டை உங்கள் வார்ட்ரோப்பில் தொங்க விடும் முன்பு அயர்னிங் போர்டில் அதை ஃப்ளாட்டாக விரித்து ஒரு ஃபேப்ரிக் பிரஷால் அதை இதமாக பிரஷ் செய்யுங்கள். இதனால் அழுக்கு தூசிகளை அகற்றி விட முடியும்.

2) வெயிலுக்கு நோ சொல்லுங்கள்

உங்கள் சூட்டின் நிறத்தை வெயில் பாதித்து விடலாம். எனவே நேரடியாக உங்கள் சூட் மீது வெயில் படும்போது கலர் மாறி விடலாம். எனவே, நேரடி வெயில் படாமல் குளிர்ச்சியான, உலர்வான இடத்தில் அதை தொங்க விடுங்கள்.

3) ஒரு மர ஹேங்கர் பயன்படுத்துங்கள்

உங்கள் சூட்டின் அசல் வடிவத்தை பராமரிக்க உருண்டையான முனைகள் உள்ள வலுவான, உறுதியான மர ஹேங்கர் பயன்படுத்துங்கள்.

4) தூசுகளில் இருந்து பாதுகாத்திடுங்கள்

தூசுகள் மற்றும் பூஞ்சைகளில் இருந்து பாதுகாக்க ஒரு ஃபேப்ரிக் பேக்கில் அதை வைத்து மூடி விடுங்கள். நீங்கள் சூட்டை வாங்கும் போது உங்களுக்கு கிடைத்த ஒன்றை கூட இதற்கு பயன்படுத்த முடியும்.

5) காற்றோட்டம் அவசியம்

உங்களிடம் பல சூட்டுகள் இருந்தால் அவற்றிற்கு சரியான காற்றோட்டம் கிடைப்பதை உறுதி செய்ய உங்களின் ஹேங்கிங் பாரில் அவற்றை சமச்சீரான இடைவெளியில் தொங்க விடுங்கள்.

6) பயணத்தின்போது ஒரு போர்ட்டபிள் கார்மெண்ட் பேக் பயன்படுத்துங்கள்

நீங்கள் பயணிக்கும்போது உங்கள் சூட்டுக்காக ஒரு போர்ட்டபிள் கார்மெண்ட் பேக் கொண்டு செல்லுங்கள். சூட்களில் சுருக்கம் ஏற்படாமல் தவிர்க்க உங்கள் சூட்கேஸில் சரியாக அவற்றை அடுக்கி வையுங்கள்.

7) பத்திரப்படுத்தும் முன்பு கறைகளை அகற்றுங்கள்

உங்கள் சூட்டை மீண்டும் வார்ட்ரோப்ப்பில் வைக்கும் முன்பு ஒரு குறிப்பிட்ட  கறையை அகற்ற விரும்பினால் மிதமான தன்மை கொண்ட டிடர்ஜெண்ட் மூலம் கவனமாக ஹாண்ட்வாஷ் செய்யுங்கள். சுத்தமான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதில் 1 தேக்கரண்டி மிதமான டிடர்ஜெண்ட் போட்டு நன்கு கலக்குங்கள். இந்தக் கலவையில் ஒரு சில துளிகள் எடுத்து உங்கள் கைகளால் சூட்டில் கறை பட்ட பகுதியில் தெளித்து இதமாக தேயுங்கள். இவ்வாறு செய்த பின் மிகுதியான ஈரப்பதத்தை அகற்ற, ஒரு சுத்தமான ஸ்பாஞ்சால் ஒற்றி எடுத்து விடுங்கள்.

இனி புன்னகையோடு சூட்டை அணியுங்கள்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது