தீபாவளி 2019 க்காக உங்கள் குளியலறைகளை பளபளப்பான சுத்தத்துடன் வைத்திருக்க எளிமையான குறிப்புகள்.

உங்கள் குளியலறை தரைகள், சுவர்கள், வாஷ்பேஸின், குழாய்கள் மற்றும் ஒதுங்கிடத்தை இந்த தீபாவளி நன்னாளில் எளிதாக சுத்தம் செய்தல். எவ்வாறு என்று அறிந்திட குறிப்புகளை பின்பற்றி படியுங்கள்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Easy Tips to Keep Your Bathrooms Sparkling Clean For Diwali 2019!
விளம்பரம்
Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆண்டுக்கு ஒரு முறையாவது வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது உங்கள் குளியலறையையும் சுத்தம் செய்ய மறந்துவிடக்கூடாது. இந்த ஒதுங்கிடத்தை நீங்கள் எளிதாக சுத்தம் செய்து பளபளப்பாக வைத்திருக்க நாங்கள் சில குறிப்புகளை அளிக்கிறோம். 

சில பஞ்சு உருண்டைகளை தயாரித்துக்கொண்டு உங்களுக்கு விருப்பமான எஸென்ஷியல் ஆயிலில் ஊறவைக்கவும். ஒரு கிண்ணத்தில் இந்த உருண்டைகளை போட்டுவைத்து உங்கள் குளியலறையில் வைத்துவிடவும். மனதுக்கு இதமான நறுமணம் அறை முழுவதும் வீசிக்கொண்டிருக்கும்.

1) வாஷ்பேஸினிற்கானது

ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கிக்கொண்டு கிண்ணத்தில் சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். இப்போது பிழிந்தெடுத்த எலுமிச்சை தோலை இந்த கலவையில் தோய்த்து உங்கள் வாஷ்பேஸினின் உள்ளும் புறமுமாக நன்றாக தேய்க்கவும். 15 நிமிடம் காத்திருந்து பின்னர் வெதுவெதுப்பான நீர்கொண்டு அலசிவிடவும். 

2) கழிப்பறை கோப்பைக்கானது

உங்கள் கழிப்பறை கோப்பையை நீண்ட காலம் சுத்தம் செய்யாது விட்டுவிட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடும். ரப்பர் கையுறையை அணிந்து கொள்ளவும் மற்றும் உங்கள் கழிப்பறை கோப்பைக்கு உள்ளே மற்றும் வெளிப்புற விளிம்பு சுற்றி 1/2 கப் வினிகர் ஊற்றவும். நன்றாக சுற்றி பரவி கீழே வரை செல்ல அனுமதிக்கவும். ஒரு டாய்லெட் பிரஷ் கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்யவும் மற்றும் ஃப்ளஷ் செய்துவிடவும். 

விளம்பரம்
Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner

3) குழாய்களுக்கானது

நீங்கள் 2 தேக்கரண்டி சமையல் சோடா மற்றும் 2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு கொண்டு ஒரு பசையை தயாரித்துக் கொள்ளவும். இதை குழாய் மீது தடவி 20 நிமிடங்களுக்கு விட்டுவிடவும். ஒரு துணி கொண்டு அந்த பகுதியை துடைத்து எடுக்கவும். இறுதியாக குழாயை தண்ணீர் கொண்டு அலசிவிட்டு உலர விடவும். இந்த கரைசல் கறைபடிந்த குழாய்களை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. 

4) டைல்களுக்கானது

1 கப் தண்ணீர் மற்றும் 3 கப் சமையல் சோடா சேர்த்து ஒரு கெட்டியான பசையை தயாரித்துக்கொள்ளவும். இந்த பசையை டைல்கள் மீது டைல்கள் இடையே உள்ள இணைப்புகள் மீதும் தடவவும். ஒரு 15 நிமிடம் அப்படியே விட்டுவிடுவும். பின்னர் 2 கப் ஒயிட் வினிகர் மற்றும் 1 கப் தண்ணீர் உபயோகித்து ஒரு கரைசலை தயாரித்துக் கொள்ளவும். அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும். இந்த கரைசலை நீங்கள் ஏற்கனவே பூசியுள்ள சமையல் சோடா பசை மீது ஸ்ப்ரே செய்யவும். இறுதியாக, ஒரு பிரஷ் கொண்டு அல்லது ஒரு பழைய டூத்பிரஷ் கொண்டு டைல்களை தேய்க்கவும். இப்போது உங்களுடைய டைல்கள் நிச்சயமாக புத்துயிர் பெற்று மீண்டும் பளபளக்கும். 

5) கதவுகளுக்கானது

உங்கள் குளியலறை கதவுகளை சுத்தம் செய்ய, ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அத்துடன் 2 மேசைக்கரண்டி டிஷ்வாஷிங் லிக்விட் சேர்க்கவும். இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். மற்றும் உங்கள் கதவு மீது ஸ்ப்ரே செய்யவும். பின்னர் ஒரு ஸ்பாஞ்சு எடுத்துக்கொண்டு கதவை தேய்க்கவும். இறுதியாக ஒரு துணியால் துடைத்து உலர்த்தவும்.

6) மேடைகளுக்கானது

ஒரு கிண்ணத்தில் 1 கப் வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொள்ளவும், அத்துடன் 1 தேக்கரண்டி சமையல்சோடா சேர்த்து பசையை தயாரித்துக் கொள்ளவும். அடுத்து ஒரு மென்மையான இழைகள் கொண்ட பிரஷ் எடுத்துக்கொள்ளவும். அந்த பிரஷை இந்த பசையில் தோய்த்து மேடை முழுவதுமாக சீராக பூசவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். அடுத்த நாள் காலை ஒரு ஈரமான துணி கொண்டு நன்றாக துடைத்து எடுத்துவிடவும். 

இந்த எளிய குறிப்புகளை பின்பற்றவும். தீபாவளியின் வண்ண விளக்குகளின் பிரகாசம் போல் உங்கள் குளியலறையின் ஒவ்வொரு பாகமும் பளபளப்பாக பிரகாசிக்கும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது