தினந்தோறும் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்தி, கழிப்பறையை சுத்தம் செய்வதற்கான புளோர் கிளீனரை நீங்களே சுயமாக (டிஐஒய்) தயாரிக்கலாம்.

கழிப்பறையை சுத்தம் செய்ய அதிக நேரத்தையும், சிரத்தையும் எடுத்துக் கொண்டாலும், கடைசியில் முடிவு என்பது எப்போதுமே எதிர்பார்த்ததை விட அதிகப்படியாக இருப்பதில்லை.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

DIY toilet floor cleaner using your day-to-day ingredients
விளம்பரம்
Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner

நீங்கள் விரும்பிய சுத்தத்தை பெற, உங்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தினந்தோறும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நீங்கள் இந்த வேலையை செய்து விட முடியும். இது கொஞ்சம் நம்ப முடியாத வகையில் இருந்தாலும், இது தான் உண்மை.

சிஐஎப் (Cif) தரை கிளீனரும் சிறப்பாக செயல்படக் கூடியதாகும்.

தேவையான பொருட்கள்

 • 2 கப் வினிகர்

 • 2 கப் தண்ணீர்

 • 1 எலுமிச்சை

 • 1 ஸ்பூன் பேக்கிங் சோடா

 • 1 குளியல் சோப்

 • 1 ஸ்பிரே பாட்டில்

செய்முறை

விளம்பரம்

Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner
 • முதலில் வினிகரையும், தண்ணீரையும் ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, அதில் பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

 • பேக்கிங் சோடா கரையும் வரை நன்றாக குலுக்கவும்.

 • அதில், முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றவும் அல்லது ஏதாவது வாசனை எண்ணையில் சில சொட்டுகளை ஊற்றவும்.

 • குளியல் சோப்பில் கால்பங்குக்கு குறைவாக வெட்டி பொடியாக்கி போடவும்.

 • ஸ்பிரே பாட்டிலின் மூடியை மூடி, நன்றாக குலுக்கவும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் முன்பாகவும் நன்றாக குலுக்க வேண்டும்.

 • இதை கழிப்பறை தளத்தின் அனைத்து பகுதிகளிலும் தெளித்து, துடைப்பான் மூலம் தளத்தை துடைக்க வேண்டும்.

 • உங்களின் கழிப்பறை தளம் பிரகாசமாக ஜொலிக்க தொடங்கி விடும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது