உங்கள் டாய்லெட்டிற்காக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஏர் ஃபிரெஷ்னர் தயாரிப்பது இதைவிட சுலபமாக இருந்தது இல்லை.

உங்கள் டாய்லெட்டை புத்துணர்வு நறுமணத்துடன் வைத்திருப்பது சுலபம். டாய்லெட் ஃபிரெஷ்னரை நீங்களே செய்து பாருங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

விளம்பரம்Buy Domex
Making an Eco-Friendly Toilet Freshener at Home Has Never Been Easier

டாய்லெட்டில் முகம் சுழிக்க வைக்கும் துர்நாற்றத்தை  மறைக்க ஏர்ஃபிரெஷ்னர் வாங்க வேண்டியுள்ளது. வீட்டிலேயே ஃபிரெஷ்னர் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? உங்களால் முடியும். இதோ இவற்றை வீட்டிலேயே செய்வது மூலம் தீங்கிழைக்கும் ரசாயனங்களைத் தவிர்க்கலாம்.  இவற்றை செய்வதும் சுலபம். உங்கள் டாய்லெட்டிற்கு முற்றிலும் இயற்கையான ஏர்-ஃப்ரெஷ்னர்களை நீங்களே உருவாக்க இதோ ஒரு சில வியப்பளிக்கும் செய்முறைகள்.

1) லெமன்-ரோஸ்மேரி கிண்ணம்

கடைகளில்  சுலபமாகக் கிடைக்கும் சில பொருள்கள் மூலம் உங்கள் டாய்லெட்டை துர்நாற்றமில்லாமல் வைக்க முடியும். இதற்கு தேவையானது எல்லாம் எலுமிச்சை, வனிலா எசென்ஸ் மற்றும் ரோஸ்மேரி. ஒரு கிண்ணத்தில் பாதி அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் எலுமிச்சை துண்டு ஒன்றை சேர்க்கவும். மேலும் கொஞ்சம் ரோஸ்மேரி குச்சிகள், வனிலா எசென்ஸ் 1/2 ஸ்பூன் சேர்த்து கலக்கவும். இந்த கிண்ணத்தை உங்கள் பாத்ரூமில் வைக்கவும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இதை செய்தால் உங்கள் டாய்லெட் புத்துணர்வு நறுமணத்துடன் இருக்கும்.

2) நறுமண  மரத்துண்டுகள்.

ஒரு கிண்ணத்தில் 2 கப் நறுமண எண்ணெயை ஊற்றி அதில் ஒரு மரத்துண்டை வைக்கவும்.  எந்த ஒரு மரமும் எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும். கடைகளில் சுலபமாக கிடைக்கும் ஒன்றை வாங்கவும்.  மரத்துண்டை இரவு முழுவதும் எண்ணெயில் ஊற வைத்திருக்கவும்.   காலையில் அந்த மரத்துண்டு எண்ணெயை உறிஞ்சி இருக்கும். அந்த மரத்துண்டை எடுத்து உங்கள் டாய்லெட்டில் வைக்கவும். வெவ்வேறு விதமான நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தி அடிக்கடி நறுமணத்தை மாற்றிக்கொள்ளவும். 

3) அத்தியாவசிய எண்ணெய்கள்

ஒரு கிண்ணத்தில் 3/4 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 2 தேக்கரண்டி வோட்கா சேர்க்கவும். 1 தேக்கரண்டி ரப்பிங் ஆல்கஹால் (அசிடோன் அல்லது ஹேண்ட் சானிடைசர்) சேர்க்கவும். இப்போது 8 துளிகள் பெப்பர்மின்ட் அத்தியாவசிய எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலி)ல் ஊற்றி வைக்கவும். பிறகு தேவைப்படும் போது ஸ்ப்ரே செய்யவும். பாட்டில் காலியானதும் நீங்கள் வெவ்வேறு விதமான நறுமண எண்ணெய்களை பயன்படுத்தி வெவ்வேறு வாசனைகளைப் பெறலாம்.

உங்கள் டாய்லெட்டை அடிக்கடி சுத்தம் செய்வது கடினமான வேலை அல்ல. சுத்தம் செய்வதுதான் உங்கள் டாய்லெட்டிலிருக்கும் துர்நாற்றத்தைப் போக்கி கிருமிகளைக் கொல்வதற்கு சிறன்ந்த வழி. இவ்வாறு சுத்தம் செய்த பிறகு இந்த குறிப்புகளைப் பயன்படுத்தவும். சுத்தப்படுத்தியப் பிறகு இந்த குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களே செய்யக்கூடிய ஃபிரெஷ்னர்கள் உங்கள் டாய்லெட்டை நல்ல நறுமணத்துடன் வைக்கும்.  

விளம்பரம்Buy Domex

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது