உங்கள் கீசரின் ஆயுளை மேம்படுத்துவதற்காக பயனுள்ள குறிப்புகள்.

உங்கள் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மின் சாதனங்களில் மிக முக்கியமான ஒன்று கீசர். இந்த எளிமையானகுறிப்புகளை பயன்படுத்தி அதன் ஆயுளை நீடிக்க வைக்கவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Effective Tips to Enhance the Lifespan of Your Geyser
விளம்பரம்
Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner

உங்கள் தினசரி வாழ்க்கையில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் சாதனம் கீசராக இருக்கலாம். அது விரைவில் சேதமாகிவிடும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். கவலையை விடுங்கள். உங்கள் கீசரை எப்படி பராமரிப்பது என்று எளிமையான ஆனாலும் ஆற்றல் மிக்க குறிப்புகளை நாங்கள் தருகிறோம். அதன் மூலம் கீசரிஇன் ஆயுளை அதிகரிக்க முடியும். இதோ தொடங்கலாம்.

உங்கள் கீசரில் கோளாறு இருந்து, அதை உங்களால் சரி செய்ய முடியவில்லை என்றால், கவலை வேண்டாம், மெக்கானிக்கை அழையுங்கள்.

1)  பிளக்கை செக் செய்யவும்

உங்கள் கீசர் பிளக்கின் நிலையை அவ்வப்போது பரிசோதிக்கவும். மின்சார ஏற்றத்தாழ்வுகளால் ஷார்ட்சர்க்யூட் ஏற்படுவதை தடுக்க, சாதாரண ஸ்விட்சுகளுக்கு பதிலாக எம்சிபி (மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர்) ஸ்விட்ச் பயன்படுத்தவும். இவை சர்க்யூட்டிற்கு சீரான முறையில் மின்சாரத்தை வழங்கும். இது உங்கள் கீசரை ஸ்திரமாக வைப்பதற்கு உதவும்.

2) வால்வுகளை பரிசோதிக்கவும்

விளம்பரம்

Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner

ஆண்டிற்கு ஒரு முறை டெம்பரேச்சர் மற்றும் பிரஷர் ரிலீஸ் வால்வுகளை பரிசோதிக்கவும். அது கீசரின் அடிப்பாகத்தில் இருக்கிறது. அதில் கசிவு இருந்தால் அதை மாற்றவும். தேவைப்பட்டால் இதற்கு மெக்கானிக்கின் உதவியை நாடவும்.

3) வெப்பநிலையை பரிசோதிக்கவும்

உங்கள் கீசரின் சரியான வெப்ப நிலை 55°C மற்றும் 65°C இடையில் இருக்க வேண்டும். குறைவான வெப்பநிலையை செட் செய்தால் மின்சார தேவை குறையும். இதன் மூலம் மின்சார செலவு குறையும். 

4) ஸ்விட்சை பரிசோதிக்கவும்

உங்கள் கீசரின் ஸ்விட்சை வெகுநேரம் ஆன் செய்து வைப்பதால், அதன் ஆயுள் குறையும். கீசரை பயன்படுத்துவதற்கு 5 நிமிடங்கள் முன்பு அதை ஆன் செய்தால் போதுமானது. 

இதை எல்லாம் அறிந்து கொண்டீர்கள்! சிறிய ஆனால் கவனமான செயல்முறைகள் உங்கள் கீசரின் ஆயுளை மிகவும் மேம்படுத்தும். இன்றே இந்த குறிப்புகளை பின் பற்றுங்கள், எங்களுக்கு பிறகு நன்றி கூறுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது